பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 隱,醫 23

"தங்கள் சித்தம் என் பாக்கியம் என்று கூறிச் சிரித்தாள் அவள். ளஅங்கிருந்து போக மனமில்லாதவளாய் நகர்ந்தாள். திடீரென்று நினைத்துக் கொண்டவராய், "ஆமாம் உன் பெயர்?" என்று கேட்டார் ஞா.பி.

"உங்களுக்கு பிடித்தமான பெயரைச் சொல்லி அழைக்கலாம். எனக்கு இதுவரை எத்தனையோ பெயர்கள் வந்து போய்விட்டன. விலாசம் மாறும் போதெல்லாம் என் பெயரும் மாறிவிடும். பிரேமா, வசந்தா, பத்மா சகுந்தலா. இப்படி அழகு அழகான பெயர்கள் எனக்கு உண்டு."

உன்னை நான் வசந்தா என்றே கூப்பிடுவேன். ஏனெனில் நீ வசந்தத்தைப் போல் இனியவளாக இருக்கிறாய். குளுமை தருகிறாய்." "நன்றி. மகிழ்ச்சி. வணக்கம் என்று கூறிக் கும்பிட்டு விட்டு நகர்ந்தாள் அவள். பார்வைப் புலனுக்கு எட்டாதவளானாள்."

இருள் கனத்துக் கடந்தது நெடுகிலும். - அறியாமை இருளிலே உண்மையைத் தேடிப்பிடிக்க

அலைகின்ற அறிவுக் கதிர் மாதிரிச் சுற்றிச் சுழன்று திரிந்து கொண்டிருந்தது லைட் ஹவுஸின் ஒளிக்கற்றை.

>k