பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டிக் கொடுத்தவன்

"காட்டிக் கொடுத்தவன்" அயோக்கியன் கருங்காலி ஆள்காட்டி கைக்கூலி.

இன்னும் வேகமான வார்த்தைகள் சூடாக வந்து விழுந்தன. உள்ளத்தின் சூட்டை உணர்ச்சிக் கொதிப்போடு கூட்டி, பச்சை பச்சையான ஏச்சு வார்த்தைகளாக உதிர்த்தார்கள் சிலர். அவர்களுடைய கோபம் பேச்சு நிலையிலிருந்து மீறி, கைநீட்டும் வெறித்தனமாக ஓங்கி விடும் என்றே தோன்றியது. - -

"நண்பர்களே கேசவனை விட்டு விடுங்கள். அவன் என்ன செய்கிறான்-செய்து விட்டான்-என்பதை அவனே உணரவில்லை. அவனுக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு கெடுதியும் விளைவிக்கக் கூடாது" என்று தாமோதரன் பணிவுடன் கேட்டுக் கொண்டார். -

+ "உங்களுடைய இந்த நற்பண்பு தான். உங்களுக்கே ஆபத்தாக முடிந்தது" என்று சிலர் முன முணத்தார்கள்.

"பிறர் பண்பு கெட்டவர்களாக வாழ்கிறார்கள் என்பதற்காக நாமும் அவ்விதமே மாறவேண்டியது இல்லையே? நாம் போற்றி வளர்த்து - பாதுகாக்க விரும்புகிற - நல்ல பண்புகளை நாமே நாசமாக்க முற்பட்டால், அப்புறம் நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்டுவிட்டு, மோகன முறுவல் புரிந்தார் அவர். எல்லோரும் தலை குனிந்து நின்றார்கள். கரம் குவித்து வணங்கினர் சிலர். - - - -

அமைதி வழி அனுப்ப, அதிகாரம் துணை வர இருளிலே நடந்து இருளாலே விழுங்கப்பட்டார் அறிவொளி பரப்ப அவாவிய தாமோதரன். -

இனி அவரை என்று காண்போமோ என்ற ஏக்கமே அவ்வூர்க்காரர்களின் உள்ளத்துச் சுமையாயிற்று உறுத்தும் வேதனை ஆயிற்று. விழிகளின் சுடுநீராயிற்று. அவர்கள் கேசவனைத் திரும்பியும் பார்க்கவில்லை. அவன் 'முகத்தில் விழிக்கக் கூட விரும்பவில்லை. - -

- கேசவன் தனியனாய் நடந்து சென்றான். அன்று முதல் அவன் தனியனேயானான். -