பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[96छू உரிமை |

அவள் எழுந்து உட்கார்ந்தாள். இனி என்ன நேருமோ என்ற பீதி அவளுக்கு இருந்தது. மனக்கலக்கமும் உணர்ச்சிக் குழப்பமும் அவளை அசத்தின. தூக்கம் வராது தன்னால் தூங்கமுடியாது - என்று எண்ணிக் கொண்டிருந்த அவளுக்கு அமைதி அளிப்பதற்காக துக்கமும் எப்படியோ வந்து அருள் புரிந்தது. - துயில் கலைந்த செல்லம்மா தரையில் கிடந்தபடியே சுவர்களையும் கூரையையும் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு துவாரத்தின் வழியாக உள்ளே பிரவேசித்த சூரிய ஒளிக்கற்றையில் மிதந்த தூசிப்படலத்தை அவள் சிரத்தையோடு கவனித்தாள். நேரம் என்ன இருக்கும் என்று அவளுக்குத் தெரியாது. "என்ன ஆகியிருந்தால்தான் என்ன? நான் என்ன செய்யப்போகிறேன் என்ற நினைப்பு நெஞ்சில் வலி ஏற்படுத்தியது. அவளுடைய கணவன் ஒரு கோழையாக இல்லாதிருந்தால் அல்லது அவனும் அவளுடனேயே இருந்து அவளுக்காகப் போராடி அம் முயற்சியிலேயே உயிர் விட்டிருந்தால், அவளும் உடன் சாகநேரிட்டிருந்தால்.ஆ எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் - தானாகவே பொங்கி எழுந்து வெளிப்பட்டது ஒரு பெருமூச்சு

அப்பொழுது கதவு திறந்த ஒசை எழுவே. அவள் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அவன்-அவளைக் காப்பாற்றியவன்-தான். வந்தான். அவள் எழுந்து நின்றாள்.

அவன் அவளுக்கு முன்னால் இரண்டு "பொட்டலங்களை வைத்தான். "உனக்கு சாப்பிடுவதற்கு" என்றான். பிறகு சொன்னான். "உனக்கு இங்கே எவ்விதமான தொந்தரவும் ஏற்படாது. நீ பயமோ கவலையோ இல்லாமல் வாழலாம். இதை உன் வீடாகவே எண்ணிக்கொள்ளலாம். உனக்கு வேண்டிய சாமான்கள், பாத்திரங்கள் எல்லாம் இப்ப வந்துசேரும்."

அவள் எதுவும் பேசவில்லை. அவளுக்குத் தனிமை அவசியத் தேவை என்று உண்ர்ந்த அவன் அங்கிருந்து போய்விட்டான்.

செல்லம்மாவின் புதுவாழ்க்கை சாரமற்றதாகத்தான் இருந்தது. அவள் தனக்கு உதவியவனைப் பற்றி அறிய வேண்டியவற்றை எல்லாம் அறிந்து கொண்டாள். அவன் பெயர் காத்தலிங்கம் என்று