பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்உடலில் தடமுலையைத்

தழுவி அமுதம் உண்ணும்

சேயின் அருமைத் திறத்தினைப்போல்

சிரித்துக் கண்டாய் என்னை !

ஆய்வுக்கள் ஆடியிலே

அறிந்த புதுமை கொண்டு

தோய்ந்ததிலே புகழ்பெறல் போல்

துணைகொண்டேன் நான் உன்னை!

கலையுணர்வு பலர்க்கிருந்தும்

கற்பனைப்பொற்சிறகு

புலவன் மொழிக் கிணைவுறல் போல்

புணர்ந்து கொண்டாய் என்னை !

பல மொழிகள் கற்றிருந்தும்

பழகு தாயின் மொழிபால்

நலனுகரும் உயிர் உளம்போல்

நானிணைத்தேன் உன்னை !

அருந்தமிழ் நூல் பலவிருந்தும்

அரியநூ லென்றேத்தத்

திருக்குறளைத் தேடிடல் போல்

தேடிக்கொண் டாய் என்னை !

வரும் புகழுக் கெழுதிடாத

வண்ணப் பாடல் சிற்பம்

கருத்துணர்ந்து தருவதொப்ப

களித்துக் கொண்டேன் உன்னை !