பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ெ 懿簽 隊簽 ஜோரானது. என்கிட்டேயும் இருக்குது. இரண்டு ஸ9ட்கேஸ் நிறையப் புடவைகள்தான். இன்னும் ஒரு ஸ9ட்கேஸ் வாங்கப் போறேன்."

வழியோடு போய்க்கொண்டிருந்தாள் ஒருத்தி, குமாஸ்தாவின் மனைவியாக இருக்கலாம். அல்லது குறைந்த சம்பளம் வாங்கும் ஒரு உழைப்பாளரின் துணைவியாக இருக்கலாம். அவள் கண்கள் தன் சீலை மீது கவிந்தன."ஏகப்பட்ட தையல்கள் வாங்கி ரொம்ப நாளாச்சு நானும் ஒரு சீலை வாங்கணும் வாங்கணுமின்னு எவ்வளவோ மாசமா நினைக்கிறேன். முடியலே. போன தீபாவளிக்குக்கூடப் புடவை எடுக்கலே இந்தத் தீபாவளிக்கும் எடுக்க முடியாது. நல்ல புடவை ஒண்னுகூட இல்லை என்கிட்டே." அவள் உள்ளம் புகைந்தது. பெருமூச்சு சூடாக வெளிப்பட்டது.

அவளையே கவனிக்கவில்லை தற் சிறப்பில் லயித்துநின்ற அலங்காரி. அவளைவிட மோசமான நிலையில் வாழ நேர்ந்துள்ள எண்ணற்ற பெண்களைப் பற்றி இவள் என்ன அறிந்திருக்கப் போகிறாள்! - -

"நவராத்திரி"யின் வேறொரு நாள்.

மூன்றாவது பெண் மோகினிபோல் திகழ்ந்தாள். நீல வானத்தை வெட்டி எடுத்து மிக நைஸ்ாக்கி, மேலாக்காகப் போட்டதுபோல் ஒரு தாவணி, பொன்மயமாய்த் தகதகக்கும் அந்திவானத்தின் அழகை நினைவு படுத்தும் ஒரு பாவாடை இவை அழகியான அவளுக்கு அற்புதக் கவர்ச்சி தந்தன. வற்றாத சிரிப்பு வழியவிடும் ஊற்று தான் அவளது சின்னஞ் சிறு வாய். . .

துள்ளிக் குதித்துக் கொண்டு, அஞ்சனம் தோய்ந்த அழகு

விழிகளை அப்படி இப்படி ஏவியவாறு வந்தாள் அவள்.

பொம்மைகள் கொலுவிருந்த அறைக் குள்ளிருந்து - பொம்மைகளில் ஒன்று உயிர் பெற்று ஆடிப்பாடி வருவதுபோல - வந்தாள். வாசல்படியில் நின்று யாருடைய வரவையோ எதிர்நோக்கினாள்.

"நான் உள்ளே வரலாமா? பொம்மைகளைப் பார்க்க ஆசையாயிருக்கு" என்று ஒரு மென் குரல் அவளருகே விழுந்தது.

ஒரு சிறுமி அழுக்குப் பாவாடை அதைவிட அழுக்கு முட்டிப்போன கிழிந்த சட்டை எண்ணெய் காணாத தலைமயிர்.