தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
183
அறிவாற்றல்களையும் பக்குவஞ் செய்து சுவாமிகள் வைத்திருக்கிறார்கள். இத் தொண்டு முக்கியமாக பிரசங்க ரூபமாகத் திகழ்கின்றது. இவ்வுயர்ந்த தொண்டிலே சுவாமிகள் ஈடுபட்டி ருக்கும்போது யாதொரு விதமான உபாதியும் எவ்வகையினும் அவர்களை அணுக இடங்கொடுப் பதில்லை. அவர்களது பொன்மொழிகளைக் கேட்கும் பேறு பெற்றவர்கள் அறிவு நிரம்பிய தத்துவ ஞானியாரவர்கள் என்பதில் தடையில்லை.
ஈண்டுக்குறித்த அன்புடைமை, தூயவொழுக்கம், பதிஞானம், பக்தி, சமயத்தொண்டு என்ற சிறப்பியல்புகளால் ஞானியார் சுவாமிகள் ஓர் உண்மை ஞானி யென்பது விளங்குகின்றது.
சுவாமிகள் பட்டத்திற்கு வந்து இப்போது ஐம்பது ஆண்டுகள் சென்றுவிட்டன. அவர்களை இன்னும் பல்லாண்டுகள் நம் பொருட்டு உதவவேண்டு மென்று இறைவனை நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.
ம. பாலசுப்பிரமணிய முதலியார்
ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள், திருக்கோவலூர் ஆதீனத்துப் பெருந் தவத்திரு அரசு கட்டிலேறி, ஞானச் செங்கோ லோச்சித் தமது சீடப் பெருங்குடி மக்களைச் சிவநெறிக்கண் நிறுத்தி, அவர்கட்கு நல்வாழ்வை அளித்து, ஆறெழுத் தருமொழியாம் சீருடைப் பெருவாளேந்தித், திரு நீற்றுக் கவசம் பூண்டு, மாயப்படை வாராமற் காத்துத் தமிழ் மண்டிலமெங்கணும் தாவிப் பரக்கும் பெரும் புகழுடையராகத் திருப்பாதிரிப் புலியூரில் வீற்றிருப்பது நண்பர்கள் அறிந்ததொன்று. சுவாமிகள் இவ்வாதீனத் தலைமை பூண்ட ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா திருப்பாதிரிப்புலியூரில் 1939௵ நவம்பர்௴ 18, 19-ம் தேதிகளில் கொண்டாடப்படும். அவ்விழாவிற் கலந்து கொண்டு நமது சமாஜம் ஒரு வணக்கப் பத்திரம் வாசித்தளிக்கும். அக்காலை நமது சமாஜத்தினர் பெருந்திரளாகக் கூடியிருந்து சுவாமிகளுடைய பொன்மொழிகளைச் செவிமடுத்துச்சுவாமிகள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பேரறிஞர் பலரும் பல கழகப் பிரதிநிதிகளும் வந்து நம்மோடு கலந்து கொள்வார்கள். இவ்விழாவின் நடைமுறை விவரங்களை மற்றோரிடத்திற் காண்க.
இவ்விழாவைக் கொண்டாடும் வகைகள் பலவற்றுள் ஒன்று சுவாமிகளுடைய குணாதிசயங்களைக் காய்தல்,