பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இளங்குதலை இசை


பாடொரு பாட்டெனக் கேட்ட அளவினில்

பண்ணமிழ் தூட்டினையே - அடி

நாடொறும் அவ்விசை நல்கி எனை உனில்

நல்லின்பம் கூட்டாயோ? பூக்

காடமர் பொற்குயில் காலம் தவறி ஓர்

காலத்தில் பாடாதே - அதற்

கீடெனச் சொல்லிடில் அவ்விசைச் சொற்பொருள்

ஏந்தி இசைப்பதுண்டோ ?

தேனார் இசைக்கடல் சீத ஒளிபொழி

தேன்மதி கண்டது போல் - பொழிற்

கானாற் றமிழ்திசை கல்லொடும் பூவொடும்

காதல் மொழிதரல்போல் - மணப்

பூநாடிக் கள்ளுணும் பொன்வண்டினமுரல்

பொங்கிடும் யாழ் இசைபொல் - அடி

மானே இளங்குத லைமொழி இன்னிசை

மண்டி மயக்கும் எனை !