பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பனை பலவும் செய்தே
ஒளிவிடும் மன்ன ரின்தேர்
தப்புதல் இன்றிப் போரில்
தகர்ந்திடு வதுபோல், இந்தத்
துப்பறு[1] உடலும் மூப்பு
தொடுத்திடும் போரில் தோற்கும்;
உப்பொடு வாழும் போதே
உயரறம் செய்தல் வேண்டும்.

32


வீட்டினை யாத்த கொத்தா!
வீடுதான் சிதைதல் காண்பாய்!
வீட்டினைப் புதுமை யாக்கும்
வினைதனில் வல்லை[2] யோநீ?
வீட்டினைப் பிணிமூப் பென்னும்
வீணரோ அழித்து விட்டார்.
காட்டினை அடையு முன்பே
கடுந்தவம் செய்யுமோ வீடு?

33



உறுதியாம் இளமை தன்னில்
உயரறி வுற்றி டாரும்,
உறுதியாய் உடல்உள் ளக்கால்
உயரறம் செய்யா தாரும்,
அறுதியாய் மீனே வாரா
அகல்மடை[3] கொக்கு தங்கி
இறுதியில் ஏமா றல்போல்
இன்பமே எய்த மாட்டார்.

34

12

  1. 39
  2. 40
  3. 41