பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

காளிதாசன் உவமைகள்



இது துஷ்யந்தன் தனக்குள் கூறுவது.

"உன் எழில்வனப்பை நீ இகழ்கிறாய், தன்மை தரும் இள வேனில் கால முழு நிலவினுடைய ஒளியை முன்தானையால் யாரால் மறைக்க முடியும்?" சா.3:13

னிச்ச மலர் மெல்லிது. எனினும், அதில் உள்ள தேனை நுகர வரும் வண்டைத் தாங்க வல்லது; ஆனால் பறவைகளின் பாதங்களைத் தாங்க வல்லதன்று.

மகளிர் உடலும் அத்தகையதே. காதலனைத் தழுவி ஏற்கவல்லது:ஆனால் ஊன் வாடத் தவம் செய்யும் வெம்மையைத் தாங்க இயலாதது. கு. 5:4

லைகளில் ஆறு தன் போக்கில் ஒடுகிறது; மலை குறுக்கிடுகிறது. என் செய்வது என ஒரு கணம் ஆறு திகைக்கிறது; ஒட்டம் தடைப்படுகிறது; மலையைச் சுற்றியோ, பள்ளத்தில் வீழ்ந்து நிரப்பியோ, ஆறு தன் வழிச் செல்லும்.

உமை சிவபெருமானை வலம் வந்தோ, அடியில் விழுந்து வணங்கியோ செல்ல உரியவள். நாணத்தால் எடுத்த காலை எங்கு வைப்பது என்று அறியாமல் திகைக்கிறாள். கு. 5:85

மத்தீயினின்று எழுந்த புகையால் புரோகிதரின் கண்கள் கலங்குகின்றன அவியைக் கையில் ஏந்தி அதை எங்கு இடுவது என அவர் திகைத்திருந்தபோது, அவி கையிலிருந்து நழுவித் தானாகவே ஒமத்தீயில் வீழ்ந்து விட்டது.

கண்வர் கண் மறைந்திருந்த நேரத்தில் சகுந்தலை உரியவரனிடம் சேர்த்துவிட்டாள்; நல்ல கல்வியைத் தக்க சீடனுக்கு நல்கியது போல, இச்சேர்க்கை நல்ல பயன் தரும் எனக் கண்வர் சகுந்தலையை வாழ்த்தினார். சா. 4:3

டநாட்டில் வேனிற்கால இரவு குறுகியது; சூரியன் மறைந்து இருள் சிறிதே பரவியதும், மீண்டும் ஒளி பரவிக் கதிரவன் உதயமாகிவிடுகிறான்; அக்குறுகிய இரவில் விண்மீன் கூட்டங்கள் காணப்படுவதில்லை. மதியும் ஒளி இழந்து தோன்றும்.

கரு உற்ற அரசி உடல் வெளுத்து, முகப்பொலிவு இழந்து, அணிகலன்கள் அன்றித் தோற்றமளிக்கிறான் பொலிவு அற்ற