பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைமயிர் நரைத்தோ ரெல்லாம்
தகுதிசொல் சான்றோ ராகார் ;
தலைமயிர் புனைந்தோ ரெல்லாம்[1]
தகவுறும் அழக ராகார் ;
தலைமயிர் வழித்தோ ரெல்லாம்
தக்கநல் துறவி ஆகார் ;
நிலைபெற அறஞ்செய் வோரே
நீள்புகழ்க் குரியர் ஆவர்

71


20. நெறி இயல்

மருத்துவர் மருந்தே ஈவார்,
மாந்துதல்[2] பிணியோர் செய்கை ;
அறுத்திட அவாவை, மேலோர்
அறநெறி மட்டும் சொல்வர் ;
அறுத்திடல், அவாவை, மிக்க
அறிவுளோர் கடமை யாகும்.
அறுத்திடா ராயின், தீமை,
அன்னைசேர் சேய்போல் பற்றும்.

72


அவாவெனும் காட்டி னின்றே
அனைத்துள கேடும் தோன்றும்.
கவைமரம் ஒன்றை மட்டும்
களைந்திடல் போதா தாகும் ;
அவாவெனும் காட்டை முற்றும்
அடர்ந்துள புதர்க ளோடு
தவிர்த்திட வேண்டும், பற்றில்
தகுநெறி எரி[3]யை மூட்டி,

73

25

  1. 70
  2. 71
  3. 72