பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

னின்றும் வழிவிலகி, விழிவிலக்கி, ஒழுகும் பெருந் தன்மை பேசுகிறது.

அப்புறம் என்னென்னவோ பேசி விடுகிறாளே!

‘தமிழ் மறை’வர்ணிக்கும் ‘பிணை ஏர் மடநோக்கும் நானும் உடைய’ அவள் பேசு வதற்குக் கேட்கவா வேண்டும்?

 
“ஒருகாலில் தவம் செய்யுதே - தாமரை
ஓயாமல் உனே நோக்குதே! (ஒரு)
ஓவியன் தூரிகைக்கும் காவியக் கற்பனைக்கும்
ஒருநாளும் கிட்டாத உன் திருமுகம்கண்டு (ஒரு)
கருநாகப் பின்னலும் கருவண்டுக் கண்களும்
திருநாளின் தெய்வத்தின் அலங்கார முகமும் கருங்காலில் விரைந்தோடும் முகிலோடு

ஒளிந்தாடும்


கன்னிநிலா வெட்கும் செந்நிறம் கண்டு (ஒரு)
குருவான தமிழ்பேசும்; நறுமாமணம் வீசும்
கோவை நிறம்கண்டு கொஞ்சும் உன்வாய்கண்டு
இரவைப் பகலாக்கும் பகலை இரவாக்கும்
இளமைக் கனவுதரும் எழிற்காதல் முகம்கண்டு....
ஒருகாலில் தவம் செய்யுதே - தாமரை
ஓயாமல் உனே நோக்குதே!....

}}

பெண்ணின் உருவமாக ‘ஆடவந்த பொற்பாவை ஆட’, பெண்மையின் உருவாக, அழகு நிறைப்பாடல் ஓட, கதை காட்சியாக விரிகிறது. அர்த்த புஷ்டி கொண்ட உவமைகள் பேசுகின்றன.{{rh||55|}