பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. நேயம் கலந்த மாயம்!

பாவழியில் துறைபோகிய பாவேந்தரின் அகத்துறை வழிப்பட்ட பாவிலே “தொட்டிழுத்து முத்தமிட்ட” பாவனையும் பான்மையும் இன்னுங் கூட உங்கள் இதழ்க்கரையில் தேன் சொட்டுகிறதல்லவா? வெள்ளையாக நீங்கள் உங்கள் மன இயல்பைச் சொல்லாமல் தப்பித்தாலும், காதலின் இயல்பையும் அதன் கள்ள உள்ளத்தின் கதையையும் எத்தனையோ ரகங்களிலே கேட்டிருப்பவன் ஆயிற்றே நான்?...

கண்ணிலும் நெஞ்சிலும் கலந்துவிட்ட காதலன் அவன். சோலேயில், மாலையில் தொட்டிழுத்து அவளை முத்தமிட்டதுடன் நின்றானா? வாய்விட்டுச் சிரித்துவிட்டுப் போய் விட்டானாம்!—குறிஞ்சிக்கலியில் கைதேர்ந்தவனாகத்தான் இருந்திருப்பான்.அவன்காதல் வாழ்க! தமிழச் சாதியானின் காதலை வாழ்த்தாமல் இருப்பேனா?

காதலுக்கு அடித்தளம் என்ற ஒன்று இருப்பது போல, அதற்கு அடிநாதம் என்ற ஒரு பண்பும் உண்டு. பண்பாட்டுப் பெருமை பூண்ட தமிழ் மரபில், இப்படிப்பட்ட காதல் சேஷ்டைகள் சிலருக்கு விரசமாகத் தோன்றக்கூடும். ஆனால் அந்த இணை அதைப்பற்றியெல்லாம் கருதவில்லை.

47