பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. புரியாமலே இருப்பான் ஒருவன்!

கவிஞர் திருலோக சீதாராமை எனக்குக் கல்லூரிப் படிப்புக் காலந்தொட்டுத் தெரியும். மனந்தொட்டுப் பழகுவார். அந்நாளில் என் உலகம் தனி. பணத்தைச் செலவழிக்க வழி புலப்படாத பொன்மயமான நேரம் அது. ஆனால், என்னுள் எப்படியோ-ஏனோ வளர்ந்துவிட்ட இலக்கியச் சுவைப்புச் சக்தி, காலக்கிரமத்தில், வெறியாக மாறிக்கொண்டிருந்த வேளையுங்கூட. என்ன வெல்லாமோ எழுதினேன். அவற்றில் பாட்டுக்களும் இருந்தன. ஒன்றைச் சொல்வேன், சில கணங்களிலே!

சரி!....

‘சிவாஜி’ ஆசிரியரைப் பற்றிச் சொல்லுமுன், அவர் புனைந்த பாடலைச் சுட்டினேன்.

வாழ்க்கையைப் பற்றிய கவி அது.

வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? ஏன் தெரியாது?

எனக்கும் தெரியும்: வேண்டிய அளவுக்குத் தெரியும். ஆமாம்: வாழ்க்கை என்றால் என்ன?

19