பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓய்வுக்குரிய சூழலே உண்டாக்கிக் கொண்டிருக்க முயலுகிற நேரத்தில், அந்தித் தென்றல் அருமையாக வெண்சாமரம் வீசி, அமைதியின் ஊஞ்சலில் அழகோட—அழகாட ஆடிவருகின்ற நிலையில், நெஞ்சைத்தொட்டு, நினைவைத் தொடும் ஓர் உணர்ச்சிப் பாடலைக் கேட்கிறேன். பெண்ணும் ஆணுமே தத்துவத்தின் இருபிரிவுகளாக இயங்கி, அல்லது இயக்கப்படுகின்ற ஒரு கட்டுக்கோப்பு நிலையின் நினைவைத் தாலாட்டிக் கொண்டிருந்த எனக்கு அந்தப் பாடலே தாயாகித் தாலாட்டத் தொடங்கியது. கண்கள் ஆரத் தழுவிக்கொண்டன. காதலர்கள் ஆவி தழுவினர். என்வேச் சிந்தனை தழுவியது!....

தாயுமானவ அடிகளார் சொல்கிறமாதிரி, ‘யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ இகவாழ்வின் நிலே யாமையைப் பற்றித் துளிகூட அக்கறைப்படாமல், அக்கரையில் ஒளிகாட்டி, ஒளியூட்டும் காதலெனும் கலங்கரையை இலக்கு வைத்துப் பாடிக்கொண்ரடேயிருக்கிறர்கள் அக்காதலர்கள்.

ஆமாம்: காதல் என்றால் என்ன?

காலங்கடந்து கேட்கிறோம்?

35