பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆரம்பத்தில் சுவையிருக்கலாம்.

ஆனால் முடிவில்தான் ‘உலகம்’ சுழல்கிறது.

இதுதான் ‘வேதம்!’ ஆம்; வேதம் முதல்வனே முதல்வன்!

அவனுக்கு வாய்த்திட்ட ‘வழி ஒற்றி’ தான் கவிஞன்.

கடவுள் இல்லையென்றால், கடவுள் எனும் சக்திப் பொதுநோக்கின் சத்தியநிலைக்குட்பட்ட கவிஞன் இருந்திருக்க முடியாதல்லவா?

ஆகவே, கடவுளே உயர்ந்தவன்!
மறுக்கமுடியுமா உங்களால்?
மறுக்கமுடிகிறதா உங்களால்?

முழு முதற்கடவுளே ஒரு ‘தத்துவம்’ என்ற முடிவுக்கு வந்தேன். எனவேதான், வாழ்க்கை ஒரு தத்துவப் பொருளாகிறது. அதன் முடிவின் ஆரம்பமாக, மேற்படி வாழ்வியலின் ஒர் உறுப்பாகிவிட்ட கவிஞனும் ஒரு ‘தத்துவம்’ ஆகிறான். இந்தத் தத்துவத்தின் நியதிதரும் தார்மீக விழிப்பின் பயனாகவேதான், கவிஞன் உருமாறி-உருக் கொண்டு, ஆதியும் அந்தமும் இலானின் உறுப்பாக முடிகிறது. இப்படிப்பட்ட சலுகையில்தான், கவிஞர் கலவாணன் அவர்களின் கவிஞன் உங்களையும் என்னையும் வம்புக்கு இழுத்து விட்டான். அல்லவா?

34