பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிலப்பதிகாரக் காட்சிகள்
1. காவிரிப்பூம்பட்டினம்

இன்றைய நிலைமை

இற்றைக்கு ஏறத்தாழ ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன் காவிரிப்பூம்பட்டினம் என்ற அழகிய நகரம் இருந்தது. அது, காவிரியாறு கடலொடு கலக்கும் இடத்தில், அதன் இரண்டு கரைகளிலும் அமைந்திருந்தது. அந்நகரம் கட லுக்கு இரையாகி விட்டது. இப்பொழுது அங்கு மணல் மேடுகளும் வயல்களும் சில வீடுகளுமே இருக்கின்றன. அந்த இடத்தில் பழைய காலத்துப் பானை ஒடுகள், உறை கிணறுகள், பண்டைக்கால நாணயங்கள் முதலியன பூமிக்குள் இருந்து கிடைக்கின்றன.

பன்டை நிலைமை

1800 ஆண்டுகளுக்கு முன் அந்த இடம் பெரிய நகரத்தைப் பெற்றிருந்த இடமாகும். காவிரிப்பூம் பட்டினம் சோழ நாட்டுத் தலைநகரம் ஆகும். சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களைக் கொண்ட நிலப் பகுதியாகும். அதனைச் சோழர் என்ற அரச மரபினர் நெடுங் காலமாக ஆண்டு வந்தனர்.

நகரப் பிரிவுகள்

காவிரிப்பூம்பட்டினம் சோழர் தலைநகரமாக இருந்தது; சோழ நாட்டுக்குத் துறைமுக நகரமும்