பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சமுதாய வாழ்வைக் கவனிப்பதனாலும் பரந்த நோக்கம் உண்டாகும்; உயர்ந்த கொள்கைகள் உள்ளத்திற் பதிய வழி உண்டாகும். நன்றாகப் படித்து உயர்ந்த கணவனும் மனைவியும் நடத்தும் இன்ப இல்லற வாழ்க்கையே இதற்குத் தக்க சான்றாகும்.

ஒத்த உணர்ச்சி

கோவலன் பல்கலை விற்பன்னன்; கண்ணகியும் பல ககைகளில் வல்லவள்; கவிபாடும் ஆற்றல் பெற்றவள். இளமை முதலே ஒருவரை ஒருவர் நேரிற் கண்டு பழகியவர்; ஒத்த உள்ளத்தினர்; ஒத்த உணர்ச்சியினர்; கோவலன் கூறிய உயர் நிலைச் செய்திகளைக் கண்ணகி அறியும் ஆற்றல் பெற்றிருந்தாள்; அவ்வாறே கண்ணகி கூறிய வற்றை அறியும் அறிவு வன்மை கோவலனிடம் குடிகொண்டு இருந்தது. ஆதலின் அவர்க்குள், ‘இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர்’ என்று கூறுவதற்கில்லை. எனவே, இருவரும் எவ்வித வேறு பாடும் அற்றவராய்ப் படிப்பதிலும் பேசுவதிலும் தர்க்கமாடுவதிலும் பாடுவதிலும் ஆடுவதிலும் ஒத்த உணர்ச்சி உடையவராக இருந்தனர்.

பா-விருந்து

கண்ணகி பாக்கள் இயற்றலில் வல்லவள். அவள் இயற்கைக் காட்சிகளைக் கண்டு கண்டு, இயற்கை அழகில் தோய்ந்து தோய்ந்து தன்னை மறந்திருத்தல் வழக்கம். அல்வாறே தெய்வ பக்தியிலும் அவள் மெய் மறந்து இருப்பதுண்டு. கண்ணகி, தன் உள்ளம் கவர்ந்த இயற்கைப் பொருள்களைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பாக்கள் பாடுதல் வழக்கம். கண்ணகி ‘வெண்பாக்-