பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முழுவதும் புகழ்ச்சி பெற்றோர்
முன்னரும் இன்றும் இல்லை;
முழுவதும் இகழ்ச்சி உற்றோர்
முப்பொழுது[1] மில்லை; ஆனால்
முழுவதும் ஆய்ந்து நோக்கி
முனைப்பதாய் உளதைக் கொண்டு
மொழியலாம் கீழோர் என்றோ—
முதிர்ந்தநல் மேலோர் என்றோ !

59


உள்ளலில்[2] உளத்தைக் கட்டி
உயர்ந்ததே உள்ளச் செய்க ;
சொல்லலில் நாவைக் கட்டி
நல்லதே சொல்லச் செய்க ;
வல்லதாய்ச் செயலில் மெய்யை
வணக்கியே நலஞ்செய் விக்க,
உள்ளமும் நாவும் மெய்யும்
ஒன்றுநற் செயல்கள் செய்க.

60


18. மாசு இயல்

இன்றுநீ உலர்ந்த குப்பை ,
எமனுடைத் தூதர் உள்ளார் ;
சென்றுளாய், உலகை விட்டுச்
சென்றிடும் வாயில் நோக்கி ,
சென்றிடும் வழியில் தங்கச்
சிற்றிடம் தானும் மற்றும்
தின்றிடக் கட்டு சோறும்
தினைத்துணை அளவும் இல்லை.

61

21

  1. 60
  2. 61