பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாதுமே நோயில் லாத
வாழ்க்கையே யாணர்[1]ச் செல்வம்
போதுமென் றமைதி கொள்ளும்
பொன்னுளம் குறையாச் செல்வம்
சூதிலா மாந்தர் தாமே
சூழ்ந்திடும் பெரிய சுற்றம்
சூதுறு போலி நண்பர்
சூழ்ச்சிசார் பகைவ ராவர்.

50


அறிவரை[2]க் காணும் நேரம்
அரியபொற் கால மாகும்;
அறிவரின் உரையைக் கேட்கும்
அஞ்செவி உண்மைக் காதாம்;
அறிவரின் பணியைச் செய்தே
அவரொடு வாழ்தல் வீடாம்
அறிவிலா ரோடு செய்யும்
அனைத்துமே அளறே யாகும்.

51


16 விருப்ப இயல்

விருப்புறு பொருள்கிட் டாதேல்
விளைந்திடும் பெரிய துன்பம்
வெறுப்புறு பொருள்கிட் டிற்றேல்
வெறுப்புமேல் வெறுப்பு சேரும்
விருப்பொடு வெறுப்பு கொள்வோர்
வீழுவர் பற்றுச் சேற்றில்
விருப்பொடு வெறுப்பில் லோரை
விரும்பிடும் உலக மெல்லாம்

52

18

  1. 54
  2. 55