பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன்னுறு தவறு ணர்ந்தோர்
தக்கநல் அறிஞர் ஆவர்,
தன்னைநல் அறிஞர் என்போர்
தகுதியில் பேதை யாவர்,
தன்னது செல்வம் என்போர்
தணந்திடும் போது தாழ்வர்
துன்னிட[1] அறம்கைக் கொண்டோர்
தூயசீர் பெறுவ துண்மை.

14


ஆழினும் குழம்புக் குள்ளே
அகப்பையோ சுவைக்கா தேதும்;
வாழினும் அறிஞர் நாப்பண்[2]
வன்கணர் அறத்தை ஓரார்.
வீழினும் துளிக்கு ழம்பு
வியன்சுவை உணரும் நாக்கு;
நாழிகை நட்பென் றாலும்
நல்லவர் அறிஞர்ச் சார்வர்.

15


கறந்தபால் உடனே மாறிக்
கலங்கியே தயிரா காது;
திறந்தெரி யாதார் செய்யும்
தீமையும் அன்ன தாகும்,
மறைந்துதான் நீற்றில், பின்னர்
மண்டிடும் நெருப்பே போல,
கரந்திடும்[3] தீமை தானும்
கவிழ்த்திடும் காலம் பார்த்தே.

16



6

  1. 22
  2. 23
  3. 24