பக்கம்:வாழும் வழி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வாழும் வழி



எனவே, கற்கத் தக்கனவற்றைக் கற்போமாக! கற்றபடியே நிற்போமாக!


9. வித்தின்றி விளையும் விந்தை

‘இல்லாமல் பிறக்காது’, ‘வித்தாமல் விளையாது’ என்பன முதுமொழிகள். விதை போடாமல் எதுவும் விளையாது என்பது இதனால் அறியக் கிடக்கிறது. மக்கள் விதைக்காவிடினும், தாமாகவே தோன்றி வளரும் மரஞ் செடி கொடிகள் கோடி கோடி. ஆயினும் அவற்றின் கீழ் விதை இருக்கும். நம் வீட்டுத் தோட்டத்தில் கூட சில முளைக்கின்றன. அவற்றை நாம் தப்புச் செடி அதாவது இயற்கையாகவே விதைத்துக்கொண்டு முளைத்த செடி என்கிறோம். அவையும் விதையிலிருந்து எழுந்தவையே!

மணிக்கூண்டுக்கு அடியில் மாயவித்தை செய்து காட்டுபவன் கூட, ஒரு மாங்கொட்டையை நட்டுத்தான், சிறிது நேரத்தில் செடியாக்கிக் காயாக்கிக் காட்டுகிறான். காயோடு கூடிய ஒரு மாங்கொத்தையும் முன்கூட்டியே ஒடித்துக்கொண்டு வரும் அவனும், உடன் ஒரு மாங் கொட்டையையும் கொண்டுவரத்தான் செய்கிறான். வித்தில்லாமல் விளையாதல்லவா? ஆனால், நம் அறிஞர்கள் சிலர் வித்தாமலேயே - விதையின் உதவி தேவைப்படாமலேயே நிலம் தானாகவே நன்றாக விளையும் என்று கூறிச் சென்றுள்ளனர். அவர்களை அடியொற்றி இன்றும் சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர். என்னே விந்தை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/58&oldid=1119179" இலிருந்து மீள்விக்கப்பட்டது