பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

இவ்வாறு இறுதியில் கூறிய நிரம்பிய இலக்கணத்தைக் கூற, அவனுக்கு எத்தனேயோ ஆண்டுகள் ஆகியிருக்கும். மாடு ஒன்றை மட்டும் கண்ட காலத்திலிருந்து, அவன் வாழ்வில், குதிரையும், ஆடும், யானையும் பிறவும் குறுக்கிட்ட பல ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வந்த பிண்னரே, அவ்விலக்கணத்தை, அவனால் காண முடிந்தது. இலக்கண நூல்கள் எழுந்த முறை இதுவே.

தமிழ் மொழியின் தலையாய இலக்கணமாய தொல்காப்பியம், தமிழ் மொழியின் எழுத்துக்களுக்கும். சொற்களுக்கும் இலக்கணம் கூறுகிறது : தமிழ் மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கிறது. பார்ப்பு, பறழ்போலும் சொற்கள், இளமை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே இளமைப் பொருள் உணர்த்தும் சொற்கள் இவை என்றும், ஏறு ஏற்றைபோலும், சொற்கள் ஆண்மை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே ஆண்மைப் பொருள் உணர்த்தும் சொற்கள் இவை என்றும், பிடி, பெடை, பெட்டை போலும் சொற்கள் பெண்மை உணர்த்தும் பெயர்களாம் எனச் சொல்லளவிலேயே பெண்மைப் பொருள் உணர்த்தும் சொற்கள் இவை என்றும் கூறுவதோடு அமையாது, “பார்ப்பும் பிள்ளேயும் பறப்பவற்றிளமை” என, இளமை உணர்த்தும் பெயர்களுள், இன்ன பெயர், இன்னின்ன உயிர்களின் இளமைகளே உணர்த்தும் என்றும், “பன்றி புல்வாய், உழையே கவரி என்றினை நான்கும் ஏறு எனக்குரிய” என ஆண்மை உணர்த்தும் பெயர்களுள், இன்ன பெயர். இன்னின்ன உயிர்களின்