பக்கம்:வாழும் வழி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

69



இம்முறையினைப் பிற்காலத்தவர் மட்டுமன்றி, மாணிக்கவாசகரின் காலத்துக்கு முன்னும் பின்னும் ஒட்டிய காலத்துப் பேரறிஞர்களும் கையாண்டுள்ளமை நம் ஆராய்ச்சிக்குப் பெரிதும் அரண் செய்யும். அதாவது, திருமூலர், கம்பர், சேக்கிழார் முதலிய பெரியோர்களும் இம்முறையைக் கையாண்டுள்ளனரே! அவர்களின் முன்னுரைகளையும் பார்ப்போமே!

முதலில் திருமூலரை எடுத்துக்கொள்வோம். இவர் மாபெருந் தமிழறிஞர். இருபதாம் நூற்றாண்டைய எந்தப் புரட்சியாளரும் இவரிடம் உரைபோடக் கூட காணமாட்டார்கள். இவர்,

“ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
.............................
வேரறியாமை விளம்புகின்றேனே”

என்று அவையடக்கம் கூறுகிறார். அதாவது, இறைவன் பெருமையை யாராலும் அறிய முடியாது, சொல்ல முடியாது எனறு கூறியுள்ளார். இதுபோலவே, மணிவாகசரும், “பெருஞ் சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் திருமூலர் தாம் செய்த நூலுக்கு, ‘மூவாயிரம் தமிழ்’ எனப் பெயரிட்டுள்ளார். இதனை அவரே கூறியுள்ள ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்ற பாடலால் உணரலாம். இந்த நூலில் மூவாயிரம் பாடல்கள் உள்ளதால் ‘மூவாயிரம் தமிழ்’ என்ற பெயரை ஆசிரியர் இட்டார். ஆனால் இந்த இயற்பெயர் நாளடைவில் மறைந்து, ‘திருமந்திரம்’ என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/71&oldid=1107077" இலிருந்து மீள்விக்கப்பட்டது