பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

454 . வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற் சொல்லணியும் பாட்டியம் வேண்டுவதின்று, ஆகவே 941 விதிகளில் 207 விதிகள் நாவலராற் செய்யப்படவேயில்லை, பயனின்மையால் ; ஆதலால் எஞ்சி யுள்ள 784 விதிகளுமே மாணாக்கர்கட்கு நிரம்ப உபயோ கமாராவை. இது கிடக்க; திருவாவடுதுறைச் சிவஞான சுவாமிகள் நாவலருடைய இலக்கண விளக்கத்தை யவீக்கும் பொருட்டுச் சூறாவளியையேவினர். இச்சூறா வளியை "அநியாய கண்டன” மென்று மகா-ள-m-ஸ்ரீ சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் கூறியது போல் நாம் ஒரு காலத்தும் சொல்லப்படாது. இக் கண்டனத்தை யுவர் வேண்டுமென்று எழுதின போதிலும், சில இடங்களில் நமது நாவலர் செய்த பிழைகளையு மெடுத்துக் காட்டியிருக்கின்றனர், சூறா வளியின் மூலமாயே நம் இலக்கண விளக்கத்திற்கு அதிக மேன்மை யென்று யாவரும் அறிதல் வேண்டும்.' இனி இரண்டாவதான மெய்ஞ்ஞான விளக்க மென்ற பிரபோத சந்தி சேர தய மென்ற நூலைப் பற்றிப் பேசுவோம். ஆங்கிலேயத்தில் (Allegory) என்பதற்குச் சமான மாக இயற்றப்பட்டுள்ள இந்நூல், முதன் முதலில் வட மொழியில் நாடக ரூபமாகக் கிருஷ்ண மிச்சிரன் என்றவராற் செய்யப் பட் (டுளது. அதை மொழிபெயர்க்கப் புகுந்த நமது ஆசிரியர் நாடக ரூபத்தை யொழித்துக் காவிய ரூபமாக எழுதியது யாது காரணம் பற்றியோ' அறி இலேம். வேகாக்தமாகிய பாற்கடலை காவலர் தமது அறிவென்ற மந்தர மலையை (மத் தாக 16ாட்டிக் கடையவே பிரபோத சந்திரோதா. மாயிற்று. இந்தப் பிரபந்தமானது பாயிரமுட்பட 48 சருக்கங்களடக்கியது. இதில் 2012 செய்யுட்கள் உள, இது விருத்தப்பாவினாற் செய்யப்பட்டிருக் கிறது. இதன் விஷப மின்னதென் று கொஞ்சஞ் சொல்லுவோம். மாயை யென் றவள் பிரம்ம சந்நிதானத்திலே விகாரம் புரிந்து கர்ப்ப மடைந்து மான தன் என்றொரு புத்திரனைப் பெற்றாள். அவன் பிரார்த்தி, நிவிர்த்தி என்ற இரண்டு மாதர் களையும் கலியாணஞ் செய்துகொண்டான். மான தனுக்கு மூத்த மனைவியாகிய பிரவிர்த்தியபினிட மிருந்து மோகன், அகங் காரன், மதனன், இடம்பன் முதலாகிய அநேக புத்திரர் களும்; தீவினை, கபடி என்ற இரண்டு புத்திரிகளும் பிறந்தார்கள் ; இனி இளைய மனைவி யாகிய நிவிர்த்தியினிட மிருந்து விவேகன், நிருபகன், பொறுமை, முகலான பல குமாரர்களும் மயித்திரி, கருணை முதகயே சில பெண்களும் பிறந்தார்கள். இவ்விருதிறத்துப் பிள்ளைகளுக்கும் பாட்டியாகிய மாயை யென்பவள் அவ ரவர்களுடைய குணங்களுக்கு ஏற்றபடி விவாக மகோற்சவம் நடத்திவைத் தாள், பிரவிர்த்தியின் மக்கள் அசுரர்களைப் போலவும் நிவிர்த்தியின் மக்கள் தேவர்களைப் போலவும் வளர்ந்து வந்தார்கள். பிற்பாடு இவ்விரு பகுதிப் பிள்ளைகளும் தங்களுக்குள் மாறுபட்டு மோகன் அரசாளும்படியும், விவேகன் காட்டிற்குப் போகும்படியும் நேரிட்டது. பிறகு விவேகன் குலம் விளங்கப் பிரபோதன் தோன்றித் - தானை கூட்டி, யுத்தத்திற்குச் சென்று மோகன் முதி