பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி) தமிழ்ப் புலவர் சரித்திரம் - 449. மால் துதிகளையெல்லாம் முன்னர்ப் பெய்திருத்தலையும், சுயம்வர காண்டத்து 47 ஆஞ் செய்யுளையும், கலிதொடர் காண்டத்து 33 ஆஞ் செய்யுளையும், - திருநெய்த்தாளத்துச் சிவபெருமானைப் பாடியபோது சிவபெருமானெனச் சுட்டாது செய்த்தானத்தா னெனப் பொதுப்படக் கூடறியும், குறுங்குடித் . 'திருமாலைப் பொடியபோது விசேடப் பற்றுக்காட்டு மாற்றலுள்ள சொற்களை யுபயோகித்துப் பாடியிருத்தலையும், தொண்டை மண்டல சதகமுடையார் இவரைக் கூறுமிடத்து, 4 மாலார் களந்தைப் புகழேந்தியும் " எனக் கூறி யிருத்தலையு முற்றுநோக்குமிடத்து இவர் சிவநிந்தை செய்யாத வைணவ ரென லேற்புடைத்தாமென்பது சிவநிந்தை செய்யாத வைணவரிலசாலோ வெனின் அற்றன்று, சிவகிந்தை செய்யாத வைணவர் சிலரை யிக்காலத் தும் யாம் கண்கூடாகக் காண்கின்றாமாக மதவாத மிகுந்திலா வக் காலத்திற் காண்டற்கென்னையென விடுக்க, அன் றியுமவர் அத்தகையராயிருப்பிற் சிவத் துதி செய்யவே மாட்டாரென்க. இஃதிவ்வண்ணமிருப்பச் சிலர், நம் புகழேந்திப் புலவர் எவை 30 வருள் வைணவராயிருந்தமை பற்றிச் சைவனாப பாண்டியன் அவரைத் தன் மகட் குத் தானமளித்த சீதள வரிசைகளுடன் அனுப்பிவிட்டனள்; அல்லாக்கால் அத்தகைய சிறந்த பாவலரை விட்டுப் பிரிதலை விரும்பமாட்டா னென்றும், ஒட்டக்கூத்தப் புலவருஞ் சோழராசனுஞ் சைவர்களாயினமையாலும், அவ் வொட்டக்கூத்தரோடிவர் முரணினமையாலும், இவர் காவற் சிறையகத்திருக் தனரென்றும், இவரது வைணவ வியல்பே யிவரைச் சோழராசனிடத்தினின் றும் பிரித்துச் சந்திரன் சுவர்க்கியினிடத் துய்த்ததென்றும், அன்றே விவ ரைச் சோழனுங் கைவிட்டிருக்கமாட்டானென்றும், தம்மைச் சில காலம் ஆதரித்த பாண்டிய சோழ ராசர்களை மகிழ்விக்குமா றுந் தம்மோடதுகாறும் பகைத்திறம் பூண்டிருந்த ஒட்டக்கூத்தர் சமயவேறுபட்டா லேதே.லுங் குறை கூறாதிருக்குமாறும் உன்னியே தமது நளவெண்பாவிற் சிவத்துதிகளை யிடையே செறித்தனரென்றுங் கூறாநிற்பர், இதனானே நம் புகழேந்திப் புலவர் பட்ட பாட்டிற்கெல்லாம் காரணம் அவரது சமய வேறுபாடே யென் பது போ தருமாதலின் அது பொருந்து மா றன்றென்ப துணர்க, இனி யிவர் பட்ட பாட்டிற்குக் கா ரண அவரது குணனேயென்க. இலர் சிறிது முன் வெகுளி யுடையரே யன்றிப் பிறரியல் பறிந்து அவ்வவற் றிற்குத் தகவொழுகும் திறமில்லாதவருமா யிருந்தார். இவ்விரண்டுமே யிவர்க்கு ஒட்டக் கூத்தரது பகைமையினையும், அதன் மூலமாகச் சிறைச் சாலை வாழ்க்கையினையும் விளைத்தன. இவைபற்றி யன்றே அவர் முரனூர்க் காவலன்பாற் சென் றதூஉ மென்க. தமிழிலக்கண விலக்கியக் கடற் கரை கண்.. புலவரொருவர் தாம் ஒரு நாட்டுச் சமத்தான வித்துவானைப் பகைத் துக் கோட வா கா தென் ற சிறு விஷயத்தை யறிந்து கொள்ளாமற் போனது மிகவும் பரிதபிக்கத்தக்க விஷயமே.