பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

ஒருமைப்பாடுடைமையால், அப் புராணங்களை பாடிய புலவர்கள் அனைவரும், பாடற்பொருளில் கருத்தினைச் செலுத்தாது. பாடிய பாக்களில் தம் கற்பனைத்திறங் களைக் காட்டிச் சென்றனர். அதனால், அக்காலத்தே - பாடப்பெற்ற புராண இலக்கியங்கள் எல்லாம், பல்வேறு சுவை பயக்கும் பண்பு வாய்க்கப் பெற்றுள்ளன. புலவர் சிலர், இவ்வாறு தல புராணங்கள் பாடித் - தமிழிலக்கியத்தை வளர்க்க, வேறு சிலர், அக்கால - மக்கள், பலகாலும் கேட்டு மகிழ்ந்த அரிச்சந்திரன் கதை, தமயந்தி கதை, பாண்டவர். கதை முதலான வட நாட்டுக் கதைகளைத் தம் பாடற் பொருளாகக் கொண்டு இலக்கி --பங்கள் இயற்றினர் ; அரிச்சந்திர புராணம், வில்லி உரத்தூரார் பாரதம் போலும் இலக்கியங்களும், இவையும் கூறும் பொருளால் வேறுபாடுடைய வேனும், கற்பனை, சொல்லாட்சி, அணி ஆகிய இவற்றில் ஒத்த இயல் புடையவே. | புராணம் பாடிய புலவர்கள், - அகத்திணை, புறத் திணை தழுவிய பழந்தமிழ்ப் பாடல்கள் பால் மக்கள் கொண்ட பற்று, 'மங்காதிருத்தல் கண்டு, நாட்டுச் சிறப்பு என்ற தலைப்பினை வைத்துக் கொண்டு, பழந்தமிழ் -- இலக்கியங்கள் கண்ட ஐந்திணை வளங்களையும் அவை ஒன்றில் ஒன்று மயங்கும் - நயத்தினையும் அணி பெறக் கூறினர் : நகரச் சிறப்பு என்ற தலைப்பினை மேற் கொண்டு, பழந்தமிழ் நாட்டின் பல்வேறு செல்வச் சிறப்புக்களையும் பண்புறக் கூறினர். அவர் கூறும் அவ்வியற்கை வளமோ, செல்வச் சிறப்போ', அவர் கூறும்