பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. தமிழ்ச் சுவடிகள் தந்த
தமிழ்த் தாத்தா

மிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப் பெறுவது தஞ்சை மாவட்டம் ஆகும். ‘கலை மலிந்த தஞ்சை’ என்றும் தஞ்சை மாவட்டம் போற்றப் பெறும். ஆடல், பாடல்களும், அழகுக் கலைகளும் நிறைந்த மாவட்டமும் தமிழ் நாட்டில் அதுவேயாகும். ‘பெரிய கோயில்’ என்று சிறப்பாகப் பேசப்பெறும் முதலாம் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் அமைந்திருப்பதும் தஞ்சை மாவட்டத்திலேயேயாகும். வற்றாத வளம் கொழித்துக் காவிரிப் பேராறு பாய்ந்து வளம் சிறக்கும் நாடு தஞ்சை மண்ணேயாகும். இத்தகு பெருமை வாய்ந்த தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் உத்தமதானபுரம் என்னும் சிற்றுாரில் சாமிநாத ஐயர் பிறந்தார். உத்தமதான புரத்தைப் பற்றிச் சாமிநாத ஐயர் கூறும் சொற்கள் வருமாறு:

‘என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான்
என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக்
காலத்தில் உள்ள பல செளகரியமான அமைப்புக்கள்
அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை;
கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை;
ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும் அழகு
இருந்தது; அமைதி இருந்தது. ஜனங்களிடததில்
திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சான்றோர்_தமிழ்.pdf/7&oldid=1007343" இலிருந்து மீள்விக்கப்பட்டது