பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

பட்ட நகை வியாபாரியே இப்பிறப்பில் பொற்கொல்லனாகப் பிறந்தான். நீ பதினான்காம் நாள் நின் கணவனைக் கண்டு களிப்பாய்.” என்று கூறி மறைந்தது.

கண்ணகி விண்ணகம் புகுதல்

கண்ணகி அக்கதையைக் கேட்டுப் பெருமூச்சு விட்டாள்; “என் காதலனைக் காணாதவரை என் மனம் அமைதி அடையாது” என்று கூறி, நகரத்தின் மேற்கு வாயிலை அடைந்தாள், அங்கு இருந்த துர்க்காதேவியின் கோயிலில். “கிழக்கு வாசலில் கணவனோடு வந்தேன்: மேற்கு வாசலில் தனியே செல்கிறேன்” என்று வருந்திக் கூறித் தன் பொன் வளையல்களை அங்கு உடைத்து எறிந்து, மேற்கு. நோக்கிச் சென்றாள்; இரவு பகல் என்பதனைக் கவனியாமல் வைகையாற்றின் ஒரு கரைமீது நடந்து சென்றாள்; பதினான்காம் நாள் ஒரு மலை மீது ஏறி, வேங்கை மர நிழலில் நின்றாள். அப்பொழுது தேவர் உலகத்தில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதனில் கோவலன் இருந்தான். அவனுடன் கண்ணகி விண்ணகம் புகுந்தாள்.


13. சேரன்-செங்குட்டுவன்

செங்குட்டுவன்

கண்ணகி வானுலகம் செல்வதற்கு நின்றிருந்த மலை, சேர நாட்டைச் சேர்ந்தது அக்காலத்தில் சேர நாட்டைச் சேரன்-செங்குட்டுவன் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனுக்கு