பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 13 தேவனே! (பாற்கர) (ஞான) சூரியனே! (ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனப்படும் நால்வகைக் கவிகளையும் (சம்பந்த மூர்த்தியாய்ப்) பாடின (லக்ஷணம்) அழகுவாய்ந்தவனே (மோகூ, தியாக) வீடுபேறு அளிக்கும் கிருபாமூர்த்தியே (ரா) இரவில் (திகழ்) விளங்கும் (கார்த்திகை) கார்த்திகை மாதர்கள் பெற்ற செல்வமே' விரும்பி உன்னை அடைந்தவர்க்கு அருள் நிரம்ப வழங்கும் (துவாதச அகூடி) பன்னிரு கண்களை உடையவனே! (ஷடாகூடிர) - ஆறு திருவெழுத்துக்கு உரிய மூர்த்தியே கிரவுஞ்ச மலையை அட்ட பராக்ரமசாலியே கூரிய வேலாயுதனே! வீரனே அசுரர்களின் (ஆர்ப்பு எழ) அலறுங் கூச்சல் எழவும், வேததாகூடிகன் - வேதத்தலைவனாம் பிரமனது (நா) சொல் (கெட) ஒடுங்கவும் (பொருள் கூறத் தெரியாது மயங்கிப் பேசுதற்கு இலாது சிறையிற்படவும், வேலை கூப்பிட கடல் ஓலமிட்டுக் கலங்கவும், (வீக்கிய) (வேலாயுதத்தை) வேகமாகச் செலுத்தின பெருமாளே! (போது போக்கி என் ஆக்கையை விடலாமோ) 999. ஒன்றாகிப், பலவாகிச் சிவாதுபமாய்த் தெளிவுப் பொருளாய்ச் (சிவம்) மங்கலப் பொருளாயுள்ளது இதுவே என்று, குரு செய்த உபதேசத்தை நான் உணர்ந்து அதன்படி ஒழுகாமல் ஏழுலகுக்கும் புலி நானே என்று, குதிரை, தேர், யானை இவற்றின் மீது ஏறும் (மாப்பு மிகுந்த (இறுமாப்புடன்) செருக்குடனே அரசாட்சியை வகித்து மாதர்களிடத்தே (ஒருகால்) ஒருபோதும் நீங்காத காம இச்சையினால் அழிவைத்தரும் தளர்ச்சியால் தி யவழியிலே (இந்த) உடலை நான் இழப்பதற்கு முன்பாக ஒளிவளர் உண்மையை அடியேனுக்குக் காட்ட அடியேன் கண்டுணர (நீ சம்பந்தப் பெருமானாய்) (வர அச்சுதனார்க்கு) (சிவ சாரூபம் வேண்டி) வரம் கிடந்த தவம் புரிந்திருந்த திருமாலுக்கு அருள் பாலித்ததும், (தூரிதா) தூரமான எட்டாததுமான மேலான பொருளை உபதேசித்தருளுக