பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 75 1023. இருண்ட கூந்தலைக் கலைத்தும், முடித்தும், அழகிய ஆடையைத் திருத்தமாக அணிந்தும், இரண்டு கயல் மீன் போன்ற கண்களையும் புரட்டி விழித் தும், அதிக பாரமானதும் - (இழை) ஆபரணங்களையும், கலவைச் சாந்தையும் கொண்ட மலை போன்ற கொங்கை அணிந்துள்ள ரவிக்கையை எடுத்தும், மறைத்தும், அழைத்தும், (கையில் உள்ள) (வளை - திருத்தி) வளையல்கள் திருத்தமாகச் சரிப் படுத்தியும் - அல்லது வளைத்து இருத்தி - தமது பேச்சின் திறத்தால் மனத்தைக் கவர்ந்து தம் வசப்படுத்தி இருக்கச் செய்து (தமது வலைக்குள்) சிக்க வைத்தும், சிரித்தும், உறவு கலந்து விளையாடியும் (நட்புப் பாராட்டியும்) பொருள் பெறுவதற்காக நிரம்பத் துதித்து, (பொருளைக் கண்டபின்) மனம் நெகிழ்ந்து, புலப்படு தெரிந்த விசித்திரமானபுணர்ச்சி வகைகளைக் காட்டி மனத்தை உருக்குகின்ற பரத்தையர்களின் காம (பீடமாகிய). புழுவுக் கிடமாகிய (அல்குற்) குழியில் இடைவிடாது விளையாடின என் செயலை (நீ) பொ றுத்தருளிச் (சடக்கென) வேகமாக என்செயலுக்கு (அப்) புறமான நன்னெறியில் அழைத்து, அந்நெறியில் என்னை (இருத்தி) பொருந்த வைத்துக் காப்பாற்றி அருள்வாயாக உருத்திரர்களைப் பழித்தும், உலகுக்கு (உலகை அழிக்க வந்த) உகக் கட்ை யுகாந்தம் - யுகமுடிவில் தோன்றும் (அப்பென)பிரளய நீரெனப் (பொங்கி எழுந்து), (ககனத்து) ஆகாயத்தில் உள்ள (உடு - தகர-படுத்து) நக்ஷத்திரங்கள் சிதறும்படிச் செய்து மலைகள் ஏழும் சூழ்ந்துள்ள (பொலப் பொருப்பு) பொன் மலையாம் மேரு வெடிபட்டு ஒலி எழுப்பவும், (மருத்து) காற்று (வாயு பகவான்) சோர்வு கொள்ளவும், நெருப்பு த்துக் கொள்ளவும், தத்தம் இருப்பிடத்தை-இருக்கையை விட்ட அத்தேவர்கள் ஒடிப் போப் அலை வீசும் கடலுட் பட்டு அலைச்சல் உறச் (செசுத்ரயம்) ன்று உலகங்களும் இவ்வாறு வேதனைப்பட (அதைக் கண்டு) ரித்தும் எதிர் நின்று ஆர வாரித்தும் போர் புரிந்த பாவியாம் (சூரனுடைய) கர்வம் அழிபட அவனை (தெழித்து) அடக்கி, (உதிரத் திரைக் கடலில்) - ரத்தத்தின் அலை வீசும் கடலின் சுழியிடத்தே (மூழ்கி) மகிழ்ந்து விளையாடின வேலாயுதத்தை (ஏந்திய) திருககரங் கொண்ட குமரப் பெருமாளே! (அழைத்து அளித்திடுவாயே)