பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 29 1005. கடலை, பயறு இவைகளுடன் துவரம் பருப்பு, எள், அவல், பொரி, சுகியன், வடை, கனல் - (கன்னல்) கரும்பு , (கதலி) வாழை, (இன்னமுது) இனிய அமுதுபோன்ற சுவையுடனே பழுத்துள்ள முதிர்ந்த பல பழவகைகள் அல்லது பலாப்பழ வகைகள், நல்ல படி இவைகளை இன்பத்துடனே கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளோர் முதல் யாவரும் தழைத்து வளப்பம் பெற அமுதாகத் தனது துதிக்கையில் மனம் மகிழ்ச்சிபெற, (உலகின் மாட்டுக்) கருணைமிக்கு வைத்து, அள்ளி எடுத்துத் தனது திருவருளைப் பாலிக்க மகிழ்ச்சியுடனே, பெரிதாயுள்ள. குடகு குடம்போன்ற பரிகசிக்கத்தக்க தன் வயிற்றினில் அடைக்கின்ற மதயானை போன்ற கணபதியின் பின் தோன்றி வந்த ஒப்பற்ற முருகனே! சண்முகனே! என்று இரண்டு கரங்களும் (மேலே) குவிய, மலர்ந்த கண்ணினின்றும் நீர்பெருக (உன்னைப்) பணியாமல்கொடிதானதும், பெரிதானதும் ஆன மிக்க வினைத்துயருடன் (தலைவிதியால் ஏற்பட்ட வினையால் வரும் துக்கத்தை அடைந்து, வறுமையால் வரும் இளப்பத்தின் - தாழ்வினால் அலைச்சலடைந்து மாதர் குழியிலே யும் அதிலே (அழுகியும்) பாழடைந்தும் பதனழிந்தும் - திரிகின்ற குணத்தின் தன்மை என்னைவிட்டு நீங்காதோ! பெரிய கடல்போல (முடுகியே) விரைந்து எழுந்து, (உயிர். களைக் கொண்டுபோகும்) வரம் பெற்ற யமன் பயப்படவும், (இரவி) சூரியனும் (மதி) சந்திரனும் பயப்படவும், பூமியும் நெறு நெறு நெறு என்று அதிர்ச்சி கொள்ளவும் வந்த ஒரு கொடியவ்ர்கள்ான அசுரர்களின் கொடிய தலைகள் சட சட சட என்று முறிய, சொல்லப்படும் (அல்லது அழகிய) மலைகளின் சிகரங்கள் கிடு கிடு கிடு என்று அதிர்ச்சியுற, ஒப்பில்லாத வேலாயுதத்துடனே, ஒளிவீசும் பச்சைநிறமுள்ளதும், நடனம் செய்ய வல்லதுமான வாகனமான குதிரை போன்ற மயிலை வேகமாகச் செலுத்தி உக்ரத்துடனே உலகை வலம் வந்த தாமரையன்ன (பத) தி டிகளை உடையவனே! (வரநதி) கங்கை குமு குமு என்று கொந்தளிக்க முநிவர்களும் நறு மணமுள்ள பூக்களைத் தூவி ஹர ஹர ஹர என்று போற்றி செய்ய, தேவர்கள் சிறை நீங்க, வர்சனை வீசும் (தாமரை) மலர்மீது தங்கிச் சரவணமடுவில் வளர்ந்த அழகிய பெருமாளே! (உழல்வகை ஒழியாதோ)