பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் Ս ԿԿՈII וע (குலவி, பொழுது போக்கி விரகெனும் அளறி ைமுழுமிய) தந்திரச் செயல்களாகிய சேற்றில் முழுகிய - ஈடுபட்டுத் தியாாந்து முழுகின (கொடிய நடலையன்) பொல்லாத துன்பத்துக்கு ஆளான வன்ாகிய என்னிடம், நடமிடதாண்டவம் செய்ய அல்லது-அடமி - பலவந்தமாய்ப் பீடிக்க எழுகின்ற நோய்களெல்லாம் வந்து அணுக, எமன் முடிவில் என் உயிரைக் கொண்டு போகும்.அந்த - (குனகியழுபவர்) அன்புச் சொற்களைச் சொல்லி அழுபவர்களும்,அயர்பவர் - சோர்வுற்றிருப்பவர்களும் முயல்பவர் ஆக வேண்டிய ஈமச்சடங்குகளைச் செய்ய முயற்சி செய்பவர்களும், (குதறு முதுபிணம்) பிணமாகி நேரமாகிவிட்டது. அது குதறும் அழுகிப்போம்; ஆதலால் அ எடுங்கள் என்று கூற அப்போது ஈமப்பறை குணன்லயிட - செய்ய, அடு சுடலையில் (உடலை அழிக்கின்ற சுடுகாட்டில்) (என் உடல்) ஏகுதல் நல்லதா? (நல்லது அன்று என்றபடி) மலைகளுக்குள்ளே தனக்கு ஒப்பில்லாததான கயிலை. மலையைத் (தனது) உடல் கலங்கி வேதனைப்பட (அற உரம் ய) மிக்க திடத்தைக் காட்டி எடுக்க முயன்ற வன்மைப் பலத்தை நிரம்ப உடையவனான, ராவணன். அடையவும் போரில் எதிர்த்து வரவும், அவனுடைய அதிகாயம் பெருத்ததான உடலும் முடிகள் ஒருபத்தும், இருபது கரங்களுடனே (அடையவும் எல்லாம்) மடிய அற்றுவிழ ஓர் அம்பைப் பிரயோகித்தவனும், rfᎸ கஜேந்திரன் மடுவில் நீர்நிலையிலே (முதலை வாய்ப்பட்டு) ஒலிட்டு அழைத்தபொழுது வந் உதவிய கருணை நிரம்பிய மேக வண்ணனும், தன்னை மதிக்காமல் வந்த (பெண்) பேயின் உயிரைக் கொங்கைப் பாலுடன் உண்டு போக்கி அருளின தனக்கு ஒப்பில்லாதவனும், தனது இரு திருவடி களால் ஏழுலகங்கள் முடியவும் அளக்க நீண்டவனுமான (விசுவ ரூடமெடுத்த) (அரி) திருமாலின் அழகிய மருகனே! அல்லது அரிக்கும் - திரு இலக்குமிக்கும் மருகனே!. சுரர்களுடைய உடல்கள் வேதனைப்படவும், அலை வீசுங் கடல் மிகவுங் கலங்கவும், வடகுவடு அன்ன - மேருமலை போன்ற கிரவுஞ்ச மலை முழுதும், இடிபட்டுப் பொடியாகவும் . வேலாயுதத்தைச் செலுத்த வல்ல பெருமாளே! (சுடலையில் நடவுதல் இனிதோதான்) வஞ்சிப்பதற்கு விடுத்தான்". பெரியாழ்வார் 1.5-4; 2.8.6. திருப்புகழ்ப் பாடல் 115 - பக்கம் 274. பாடல் 108 - பக்கம் 534 பாடல் 852-பக்கம் 96 பார்க்க 0 பூமியை அளந்தது - பாடல் 268 பக்கம் 166 கீழ்க்குறிப்பு.