பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 297 1132. என்றும் கெடாத ஞான அறிவைக் கொடுத்ததையும், ஆராய்ந்து அறிய வேண்டிய நூல்களில் (ஆராயும்) கருத்தைக் கொடுத்ததையும், (ஆதேச வாழ்வில்) ஒரு வழியாக நிலைத்திராத - திரிபு உள்ள வாழ்க்கையில் (பிரமித்து) மயங்கித் திகைத்து (இளைத்து) தளர்ச்சியுற்று உயிர் அழிந்து போகாமல் ஆசா - ஆசை என்கின்ற, (பயோதியை) கடலைக் கடக்கும் படியான் (தாண்ட விட்ட) ஆற்றலைத் தந்ததையும், (வாசா மகோ சரத்து) வாக்குக்கு எட்டாத ஒரு நிலையில் என்னை இருக்கும்படி வைத்து அருளியதையும், (ஆபாதனேன்) மிகவும் கீழ்ப்பட்டவனான நான் மிக்க கீர்த்தியைப் பெற்று இனிமையுடன் உலகு ஏழும் - (ஏழுலகில் உள்ளவரும் உள்ளவையும்) நானே எனும் அத் துவித நிலையைப் பெற் று. (நாமம்) கிர்த்தி கொண்டதும் அற்புதவகையில் அமைந்துள்ளதுமான திருப்புகழ்ப் பாவைத் தேன் ஊறின இனிமையுடன் (ஓதிப்) பாடி, எல்லாத் திசைக ளிலும் (திசைகளில் உள்ள ஊர்களிலும்) ஏடு ஏவு ராஜ தத்தினை நான் எழுதி அனுப்பும் ஏடு - கடிதமோ பாடலோ (மரியாதையுடனும் அன்புடனும் போற்றப் படத்தக்க) - ராஜ தத்தினை பெருமிதத்தை மேன்மையைப் (பணித்ததும்) எனக்கு அருளிச் செய்ததையும் - தந்தருளியதையும், இடராழி துன்பக் கடலினின்றும். (ஏறாத கரையேற முடியாத (மாமலத்ரய) பெரிய (ஆணவம், கன்மம், மாயை, எனப்படும்) மும்மலங்களும், (குணத்ரயம்) தத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும், (நானா விகாரம்) தமான (விகாரம்) கலக்கங்களும் (காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை - எனப்படும் எண் வகைப்பட்ட துர்க்குணங்களும்) கூடியதும், (புற்புதம்) நீர்மொக்குள் - நீர்க்குமிழிபோல் தோன்றி மறையும் தன்மையுள்ளதுமான பிறப்பு நீங்கும் வகைக்கு - (ஏது ஏமமாய்) - ஏம ஏதுவாய் இன்பமான நிகழ்ச்சியாய் இன்பந்தருவதான வரமதாக - எனக்கு அனுக்கிர. கித்ததையும் நான் மறக்க மாட்டேன்; மாநாகம் - பெரிய வாசுகி என்னும் பாம்பாகிய (நாண்) கயிற்றை (வலுப்புறத் துவக்கி) பலமாகக் கட்டியுள்ள ஒப்பற்ற மகாமேரு (பூதரத்தனு) மலையாகிய வில்லைப்பிடித்து, ஒப்பற்ற (மாலாய) திருமாலாகிய (வாளியை) அம்பைத் (தொடுத்து) செலுத்தி, அரக்கரில் - (திரிபுரத்தில் இருந்த அசுரர்களில் ஒரு மூன்று பேர் மாத்திரம் -