பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது) திருப்புகழ் உரை 141 செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் (உனது மாமியாராகிய தேவி ஆடவும், விசுவ ரூபம் எடுத்த உன்து மாமனாராகிய ருமால் ஆடவும், (நீ ஏறிவரும் மயிலாடவும், நீ நடனம் புரிந்து வரவேனும், கதாயுதத்தை எப்போதும் தோளில் வைத்துள்ள வீமசேனன் எதிர்த்துச் செலுத்தின பாணப்ரயோகத்தில் பெரிய பகைவர்களின் பெருஞ் சேனைகள் பொடிபட (உதவினவரும்) கதறிச் சென்ற (காலி) பசுக் கூட்டங்கள் போனவை மீண்டுவரப் புல்லாங் குழலை ஊதினவரும், அருச்சுனன் ஏறிச்சென்ற தேர்மேல் பாகனாயிருந்து பொன் மயமானதும் வேத ஒலியைத் தருவதுமான (கோடு)- சங்கத்தை ஊதினவரும், அலைமோதி வீசும் (உததி மீதிலே (பாற் கடலிலே (சாயும்) பள்ளிகொள்பவரும் (உலகம் மூடு சீர்பாதம்) உலகத்தையே அளந்து மூடின திருவடியை உடையவரும், (உவணம் ஊர்தி) கருடனை வாகனமாகக் கொண்டவரும் ஆன சிறப்புற்ற (மாயன்) திருமாலின் மருமகனே! அன்றலர்ந்த மலர் மாலையை அணிந்த மார்பினனான பிரபுட தேவ மகாராஜனுடைய உள்ளம் நெகிழ்ந்துருகும் வண்ணம் அவனது உள்ளத்தில் வாழ்கின்ற பெருமாளே தேவர் பெருமாளே! (மயிலும் ஆடி நீ ஆடி வரவேணும்) 1057. ரத்தம், மூளை, மாமிசம், நாற்றம் மிக்க மலம் இவை நீங்காததும், தோல் மூடி உள்ளதுமான குடிசை (கோழை) கபம் முதலிய (மாசு) அழுக்குகள் ஊறியுள்ள ஒரு குழி, நீரின்மேல் (தோன்றும்) குமிழிக்கு ஒப்பாகி. (உடனே) அழிகின்ற மாயை (ஒரு பொய்த் தோற்றமாய் (ஆதார) (ஒரு பற்றுக் கோடாக நினைக்கப்படும் (குறடு) இறைச்சி கொத்தும் பட்டடை மரமாக வைத்து - பருந்து, நாப், பேப். பல காக்கைகள் (இவை) "இம் மண்ணினை ஒரடியிட்டு இரண்டாம் அடி தன்னிலே தாவடி யிட்டானால் இன்று முற்றும் பெரியாழ்வார் 2-10-7 * நீரிற் குமிழி யிளமை நீதி நெறி விளக்கம். காப்பு "நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கை. கந், அலங். ை tt ஈயெறும்பு நரி நாய்கணங்கழுகு காகம் உண்ப உடல்" - திருப்புகழ் . 902