பக்கம்:மருதநில மங்கை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7


அழிந்துஉகு நெஞ்சத்தேம்

ணவன் பரத்தை வீடு சென்று வாழும் பழியுடையன் ஆனான். அவன் செயல் அறிவுடையோர் பாராட்டும் அறமாகாது என அவனுக்கு அறிவுரை கூறாது, அவன் பரத்தையர் ஒழுக்கத்திற்குத் துணை புரிந்தனர் அனைவரும். கணவனும் மனைவியும் கூடி மேற்கொள்ளும் வாழ்க்கையின் மாண்புகளைப் பாராட்டிப் பாட்டிசைக்க வேண்டிய பாணன், அக்கணவன் பரத்தையரோடு கூடி வாழும் வாழ்வில் பெறலாம் இன்பமே பேரின்பமாம் எனப் பாராட்டி அவனை மகிழ்வித்தான். ஊர் மக்களின் ஆடைகளை அழுக்குப் போக வெளுத்துத் தந்து, அம் மக்களை அறநெறியில் நிறுத்தக் கடமைப்பட்ட வண்ணாத்தி, தன் வெளுக்கும் தொழிலைக் கைவிட்டு, விரும்பும் பரத்தையரைத் தேடிக் கொண்டு வரும் தூதுத் தொழில் மேற்கொண்டாள். ஒழுக்க நெறி உணர்த்தும் விழுமிய கடப்பாட்டை உடைய அந்தணன், அப் புகழ் நெறி மறந்து, பழிநெறி மேற்கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/49&oldid=1129477" இலிருந்து மீள்விக்கப்பட்டது