பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது . திருப்புகழ் உரை 193 1087. யோசனையுடனே நிரம்ப விஷம் எல்லாவற்றையும் தன் னிடத்தே கொண்டுள்ளதும், (கலக வாள்) போருக்கு என்று திட்டப்பட்ட (அல்லது கலகத்தை - சச்சரவை விளைக்கத்தக்க - வாள் போன்றதுமான கண்களை உடைய மாதர்களின் - (கடின) வன்மை கொண்டதும், (போகத்த) இன்ப அனுபவத்துக்கு உரியதும், (புளக) புளகாங்கிதம் கொண்டதும், (வார்) ரவிக்கை அணிந்ததுமாயுள்ள கலவைச் சாந்து நிறைந்த செப்புக் குடம் போன்ற கொங்கையின் மேலே - உள்ளம் உருகி, நான் மிகவும் (அவசமே உற்ற) வசமழிந்த நிலையிலே யிருந்த பேச்சுக்களைப் பேசி அழியாமல், உனது இரண்டு திருவடிகளின் அருட் பெருமையைப் பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை (எனக்கு நீ) அருள் புரிவாயாக (பருவரல் உற்று) மிக்க துன்பத்தை அடைந்து, மடுவிடத்தே இருந்த (பகடு) யானை (கஜேந்திரன்) வாய்விட்ட மொழியாலே - ஒலிட்டு அழைத்த மொழியைக் கேட்டு அன்போடு வந்து அந்த (அல்லது தமதிடத் திருந்த சக்கரத்தை ஏவின. பழைய திருமாலுக்கு மருமகனே! (முருகு) இயற்கை மணம் உலவும் கூந்தலைக்கொண்ட வேடப் பெண் (வள்ளியின்) கொங்கையை விரும்பின (அல்லது கொங்கையில் துஞ்சின) கருணை வேளே! முருக மூர்த்தியே பக்தர்களுக்கு அருகே நின்று உதவுபவனே! (கிரவுஞ்ச மலை ஒடிந்தழிய வேலைச் செலுத்தின பெருமாள்ே! (ஞானத்தை அருள்வாயே) 1088. கொலைத் தொழிலையும் - நிரம்பத் தந்திரங்களையும் கற்றுள்ளதும், குவளை மலர் போன்றதும், (ஏர்) அழகு கொண்டதும், மை பூசியுள்ளதுமான கண் பார்வையை உடைய மாதர்களின் (காதில் உள்ள) குழைகளிலும், இளைப்புற்ற நடையிலும், (நெய்த்த) வாசனைத் தைலம் பூசியுள்ள (அல்லது பளபளப்புள்ள)- கூந்தலிலும், பற்களிலும், அழகிய (அல்லது பெரிய)