பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 319 (அமை என) மூங்கில் போன்று செழித்து வளர்ந்துள்ள (சித்ர) அழகிய இரண்டு புயங்களையும் தழுவி அமுது என்று சொல்லும்படிக்கு இனிப்பைக் கொண்டதும், (கொவ்வைக்) கனி போன்றதுமான வாயை நெருங்கி அனுபவித்து, (அமளியில்) படுக்கையில் சேர்ந்து (களிக்கும்) காம இச்சை என்ற பெருங் கடலில் முழுகி (அனவரதமும்) எப்போதும் பொருந்தியுள்ள ரத்ன மணி மாலையை அணிந்துள்ள அழகிய கொங்கைகளிற் படியும் (கலவியின்) புணர்ச்சியின் (நலம்) இன்பம் (அற்ப சுகமாகினும்) (அற்ப சுகம்) நீடித்திராது கொஞ்ச நேரமே சுகம் தருவதா யிருந்த போதினும் (அது) மா அனுபவம் - பெரிதும் இயற்கையாகவே விரும்பப்படும் ஒரு நுகர்ச்சி யின்பமாம்; இதைச் (சற்றும்) கொஞ்சம்கூட விட்டொழிக்க் முடியாது. முடியாது. தமனிய குல கிரியோ சக்ர கிரியோ - பொன் மலையாம் சிறந்த மேரு மலைதானோ சக்ரவாள கிரியோ, (அல்லது) கடல்தானோ, (அல்லது) விஷத்தை உச்சியிற் கொண்டதும், முற்றினதுமான பெரிய இருளுருவமோ (அல்லது) தனு என வில்லைப்போல (முனை இட்ட) போர்க்கென்றே அமைந்துள்ளதும் அல்லது வில் அம்பின் நுனிக்கூர்மை கொண்டதும், கொலைசெய்ய வல்லதுமான மூன்று இதழ்களை உடைய வேல் (சூலம் போன்றதுமான கண்களின் கொடிய பார்வை) தழல் எழ நெருப்பைக் கக்க வருகின்ற கொடுமை காட்டும் எமன் என்ற பாதகன்தானோ! (அல்லது) யுகாந்த காலத்தில் யுக முடிவில் மிக்கு எழுகின்ற (வடவா அனலமோ) வடவா முகாக்கினியோ ஒப்பற்ற இவன் - என்று (யாவரும் அஞ்சும்படி) (பிசித அசனர்) (மாமிசத்தை உண்பவர்) அரக்கர்களின் ( பூபதியாகி) அரசனாகி தேவர்கள் யாவரும் (அறையோ அறையோ) என்னுடன் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள்; (அரி - அயன் முழுதுக்கும்) திருமால் பிரமன் முதலானோர் யாவரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள்; எழு புவி எனப்பட்ட மூவேழு உலகத்தினரும் - போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள் - (பொர வாரும்) என்னுடன் சண்டை செய்ய வாருங்கள்