பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 முருகவேள் திருமுறை (7- திருமுறை

  • அகத்தியனொ டுரைத்தபொரு ாளித்தருளி அரிப்பிரமர்

அளப்பரிய பதக்கமல மருள்வாயே கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு கணத்திலவர் நினத்தகுடல் கதிர்வேலாற். கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை யளித்திடரை யறுத்தருளு மயில்வீரா, செறுத்துவரு t கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி சினத்தினொடு பறித்தமர்செய் பெருகானிற். செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது சிமிழ்த்தனமு னுறத்தழுவு பெருமாளே. (161) 1156. ஈடேற தனதனன தனதான தானான தானான தனதனன தனதான தானான தானான தனதனன தனதான தானான தானான தனதான குணகியொரு மயில்போல வாராம னோலீலை விளையவினை நினையாம லேயேகி மீளாத கொடியமன தநியாய மாபாத காபோதி யெனஆசை.

  • சிவபிரானுக்கு உபதேசித்த பொருளை எனக்கு அருளுக எனப் பாடல் 1127 - அடி 4-ல் கேட்ட அருணகிரியார் இப் பாடலில் அகத்தியருக்கு உரைத்த பொருளை எனக்கு அருளுக என வேண்டுகின்றனர். திருத்தணிகையில் முருகவேள் அகத்தியருக்கு உபதேசித்தார். வேல் இறைவன் இயம்பிய ஞான முற்றுணர்ந்து. பன்முறை தாழ்ந்து. அடித் தொண்டு உஞற்றினன் பன்னாள். பின்னர். பொதியம் அடுத்து முத்தமிழை வளர்த்து வாழ்ந்திருந்தனன் முனிவன்" - பாடல் 1141-பக். 322 குறிப்பு

1 யானையின் தந்தங்களைச் சிங்கங்கள் பறிப்பது: வேழத்தின் வெண்மருப்பினைக் கீழ்ந்து சிங்கங் குருகுண்ண" "பருக்கை யானை மத்தகத்து அளிக்குலத்து உகிர்ப்புக" . சம்பந்தர். 2-114.9, 2-101-1 'மத்தக் கரி முகத்தை வாளரிகள் பிற". ஈங்கோய். 63 " ஆளி நன்மான் வேழத்து வெண்கோடு வாங்கிங் குருத்தருந்ததும்" - அகநா. 381 "களிக்குருகு உண்னு மடங்கல்". கந்தபுரா. திருவிளை 117 "களிக்குருகு தேரரி. உண்டுவட்டி". கந்தபுரா ஆற்று. 14 (தொடர்ச்சி பக்கம் 369)