பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192


என்று கேட்ட நிலையிலும் அலிமாவின் தாயுள்ளத்தை தாய்மையின் பெருஞ்சிறப்பை எடுத்துக்காட்டுகிறார் உமறுப் புலவர்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் எச்சரிக்கையுடன் குழந்தையைப் பாதுகாத்த சிறப்பினை,

'சேமமாகிய பொருளினைக் காத்திடுந் திறம்போல்
வாம மாமணி முகம்மதை"

வளர்த்தனர் என்று கூறும் உமறு இம்மைச்கு மட்டும் பயன் தரும் சேமப்பொருளல்ல முகம்மது மறுமைக்கும் பயன்படும் மாபெரும் சேமப்பொருளாதலின் அவர்களுடைய கருத்து நிறைந்த காவலைப் பாடும் திறன் பாராட்டற்குரியதே.

ஹபஷி நாட்டிலிருந்து ஹூனைன் நகரத்திற்கு வந்த பல நஸ்றானிகள் நபிகள் நாயகத்தை அடையாளம் தெரிந்து கொண்டு அலிமாவிடம் வந்து,

"உங்க டம்மனைக் குளதொரு குழந்தைநும்முயிர்போ
லெங்க டம்மனத் துவகையால் வளர்ப்பதற் கிசைந்தோம்
திங்கள் வாணுத லளித்தியேற் செல்வமுஞ் செருக்கும்
பொங்கு மாநிதி தருகுவ மியாமெனப்புகன்றார்."[1]


'உயிரை ஒப்ப வைத்து வளர்க்கும் குழந்தை' எது என்று கேட்ட அலிமாவுக்கு 'வென்றி மற்புயன் முகம்மது' என்று பெயரைக் கூறினர் நஸ்றானிகள், இச்சொல் அலிமாவின் செவியில் நுழைந்து சுட்டது; மனங் கொதித்துச் சினம் எனும் தீ மூண்டது. 'நீங்கள் சொல்ல வந்த கொடிய


  1. 1. சீறா. இலாஞ்சனை தரித்த படலம் 52