பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

பாரதிதாசன்



திராவிட அன்னை
ஆண்குழந்தை தாலாட்டு


ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ

சீராகும் இன்பத் திராவிடனே
எங்கரும்பே
ஆரா அமுதே அன்பேநீ
கண்வளராய்.

ஆரியர்கள் இங்கே அடிவைக்கும்
முன்னே
வேரிட்டு வாழ்ந்த வெற்றித்
திராவிடரின்

பேரர்க்குப் பேரன் பிள்ளாய்நீ
கண்ணுறங்கு!
சேரஅரிதான செல்வமே
கண்ணுறங்கு.

வெண்தா மரையில் விளையாடும்
வண்டுபோல்
கண்தான் பெயரநீ என்ன
கருதுகின்றாய்?