பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


குடித்தலே பெரும்பான்மையான வழக்கம். வசதியுள்ளவர்கள் பகலில் கூழ்குடித்து, இரவில் சோறு உண்பது வழக்கம். வசதியற்றவர் இருவேலைகளிலுமே கூழ் குடிப்பர். இன்றும், ஏழைகளும் சிற்றுார்களில் வாழும் மக்கள் பலரும் கூழ் குடிப்பதைக் காணலாம். பண்டு, கரைத்துக் குடிக்கும் கூழே பெரும்பாலும் உணவாக இருந்ததால், பின்பு தோன்றிய எல்லா வகை ஆரவார உணவுக்கும் கூழ்” என்னும் பெயர் இலக்கியங்களில் ஏறிவிட்டது. கோவூர் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் (10) ஒன்றில் உள்ள

“கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்”

என்னும் பகுதியும், சமண முனிவர் பாடிய நாலடியார் என்னும் நூலின் பாடல் (62) ஒன்றில் உள்ள

“துகடிர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க”


என்னும் பகுதியும்,

“எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்குறு உம் நெய்தல் ஓசை.”

“அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”. (64)”

(அறத்துப்பால் - இல்லறவியல்-மக்கட்பேறு).

என்னும் திருக்குறள் பாடலும், கூழ் என்னும் சொல்லுக்கு உணவு என்னும் பொருளைத் தந்து கொண்டிருப்பதைக் காணலாம். சேந்தன் திவாகரநிகண்டு என்னும் நூலின் ஆசிரியராகிய திவாகரர் என்பவர், சொற்பொருள் கூறுகிற அந்நூலில், கூழ்” என்னும் செர்ல்லுக்குச்சோறு? என்றே பொருள் கூறலாயினர்:


* நாலடியார் - அறம் - துறவறவியல் - செல்வம் நிலையாமை.