பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


இவ்வாறு இலக்கிய ஆட்சிகள் இன்னும் பல தரலாம். பண்டு உணவாக இருந்த கூழே அன்று கடவுளுக்குப் படைக்கப்பட்டதால், அம்மரபை விடாமல், இன்றும் பல குடும்பத்தினர் கடவுளுக்குக் கூழ் படைக்கின்றனர். படைத்த கூழை ஏழைகட்கு அளிப்பதைக் கூழ் ஊற்றுத்ல் என்னும் தொடரால் குறிப்பிடுவது மரபு. தண்ணீர் விட்டுக் கரைத்த நீர்மப் பொருள் ஆதலின், ‘ஊற்றுதல்’ என்று கூறும் மரபு உண்டாயிற்று. இயற்கை வழிபாட்டு முறைக்கு இது பெரிய சான்றாகும். இனி, மேலும் சில படையல்களைப் பற்றிப் பார்ப்போம்.

பொங்கிப் படைத்தல் :

மிகப் பழங்காலத்தில் மக்கள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்தனர்; கஞ்சியில் உள்ள தண்ணீரைத் தனியாக இறுத்தும் குடித்தனர். தண்ணீரும் சோறுமாக உண்ட பழக்கத்தைத் தொடர்ந்து, பிற்காலத்தில் சிறப்பு உணவையும் நல்ல தண்ணீர் நல்ல கஞ்சி’ என்று கூறும் மரபு ஏற்பட்டது. ‘நல்ல தண்ணீர் இல்லாததனாலே-நல்ல கஞ்சி இல்லாததனாலே உடம்பு கெட்டு விட்டது'-என மக்கள் இன்றும் பேசிக்கொள்ளும் வழக்காற்றிலுள்ள நல்ல தண்ணிர்’, ‘நல்ல கஞ்சி’ என்பன, நல்ல சிறப்பு உணவையே குறிக்கின்றன. பண்டைக் காலத்தில் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கும் பழக்கத்திலிருந்து சிறிது முன்னேறி, கஞ்சி நீரை வடிக் , சோற்றைப் பொங்கித் தின்றனர். சோறு கொதிக்கும்போதே புளித் தண்ணிர், மிளகாய், உப்பு ஆகியவற்றை அதில் போட்டுப் பொங்கித் தின்றனர், சோறு பொங்கித் தின்னு, சொந்தக் கவி பண்ணு’ என்னும் முதுமொழியிலிருந்து, பொங்கித் தின்னுதல்’ என்னும் வழக்காற்றை அறியலாம். பண்டு ஏற்பட்ட :பொங்கித் தின்னுதல்’ என்னும் வழக்காறு, இப்போது: சிறப்பு உணவு செய்து உண்ணுவதைக் குறிக்கவும் பயன்