பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதையைஎல்லாம் நீயும் நானும் மறந்து விடுவதே நல்லது!” என்று முத்தாய்ப்பு வைக்கின்றான் இறுதியில் அவளது கடிதம் அவளுடைய அழியாக் கனவுகளுக்கு முத்தாய்ப்பு அமைத்து விடுகிறது. எவ்வளவு சாமர்த்தியசாலிதான் ஆனாலும், ஓர் அயோக்கியனுடன் வாழ விரும்பவில்லை. திடீரென்று ஏற்பட்ட முடிவல்ல இது. ‘என்னைத் தேட வேண்டாம்,’ என்று எழுதி, பின் குறிப்பு ஒன்றையும் இணைத்திருந்தாள். அவள் தன் பிறந்தகத்துக்குச் செல்லவில்லையாம்!


ஒரு சிறு விஷயம்!

‘நளினி’ என்னும் மகுடம் ஏந்திக்கொண்டிருக்கும் இக்கதையை ‘நாவல்’ எனப் பெருமையுடன் தேர்ந்தெடுக்கின்றார், நளினியைப் படைத்தவர். இந்தப்படைப்பாளரை முதலில் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர் நம் மதிப்புக்குரியவர். பெயர் : க. நா. சுப்ரமணியம். பெரும்பாலோர் சொல்கிறார்கள் : “க. நா. சு. பெரிய இலக்கிய விமரிசகர்!” சிலருக்கு அவர் என்றால், சிம்ம சொப்பனம். அப்படிப்பட்ட ‘பயங்கர மனிதர்’, தாம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிய இந்த நளினியைப் பற்றி இப்போது முன்னுரை எழுதும்போது, ‘பேஷ்! தேவலேயே! ஒரு சிறு விஷயத்தை வெகு அழகாக எழுதி விட்டோமே?’ என்று குறிக்கிறார்; குதிக்கிறார். “நல்ல ‘பேஷ்!’ போங்கள், மிஸ்டர் கே. என். எஸ்!”

ஒரு சிறு விஷயம்! - அந்தச் சிறு விஷயமும் இல்லையென்றால், இதைப் படித்துத் தீர்க்க வேண்டுமென்று எனக்குத் தலைவிதியா, என்ன? வயதால் மட்டும் வளர்ச்சி

90