பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 155 குலிசாயுதம் ஏந்திய அரசன் (இந்திரனுடைய பொன்னுலகைக் காத்தருளின தலைவனே தேவனே வேளே! தேவர் பெருமாளே! (ஈடேறாதே சுழல்வேனோ) 1064. (வாழ்க்கைக்கு முதலி - முதன்மையை உடைய ஆதாரமாய் இருக்கும் (யாக்கை) தேகமும் அதன் இளமையை (நீத்து ஒழித்து, (அறவும்) மிகவும் மூத்து, (தாராகா ஆதாரா) தாரக ஆதாரா (எங்களைக்) காத்தளித்து (எங்களுக்கு ஆதாரமாய் - பற்றுக் கோடாய் இருந்தவனே என்று (ஞாலம்) பூமியில் உள்ளோர் முறையிட (ஏங்கப், (படு பறைகள்) ஒலிக்கின்ற பறை வாத்தியங்கள் (ஆர்த்து எழ) மிகச் சப்தித்து ஒலி செய்ய, (உடலை பிணத்தைத் துணியால் மூடி, வீட்டுக்குள்ளே (கேள்) சுற்றத்தினர் கோகோ என்று கூச்சலிட்டு அழுது மனம் வருந்த பிள்ளைகள் கூச்சலிட்டு அழ, மனைவி கூச்சலிட்டு அழ, தாய் (தலையில்) மோதியும், விழுந்தும், (என்) செல்வமே என்று அலறிக் கூச்சலிட்டு அழவும், மாயமாக வந்த யமனுடைய பட்டணத்துக்குப் புகும் (மரணம்) சாவு என்னும் பயணம் (வாரா) உனக்கு வராது; வான் ஆள் - வானுலகை ஆளப் (போ நாம்) - போம் நாம் - (போவோம் நாம்), நாம் போவோம் (நீ மீள்) நீ என்னுடன் மீண்டு வா - என்று கூறி என்னை நீ அழைத்து செல்ல வரவேண்டும் (அல்லது மாயமறலியூரிற் புகும் மரணப் பயணம் உனக்கு வராது; (வான்) வானுலகை (ஆள்) ள்வதற்கு (போ) போவாயாக (நாம்) நீ; (ஆதலால்) நீ மீள் - மீண்டு என்னுடன் (வருவாயாக) என்று கூற (நீ) (வர) வேண்டும். புதல்கள் (செடி புதர்கள் - துாறுகள்) அறா - நீங்காத - நிரம்ப உள்ள (புனம்) மலைச் சார்பில் உள்ள கொல்லைகளில் இருக்கும் வேடர்கள் (கூக்குரல்) கூச்சலிடும் குரல் (பேரொலி) நீங்காத பிரதேசத்தில் உள்ளவர்களாகிய (வேடர்களும்), பாரா வார - ஆர் - அசுர் - பாராவார ஆர் அசுரர் - கடல் போலப் பெருகி நிரம்ப வந்த அசுரர்களும் (அல்லது கடலுக்குள் அசுரர்களும்) (ஒட) பயந்து ஒடும்படி - (அவர்களுடன்) சண்டை செய்து அவர்களைத் தாக்கி எதிர்த்த வெற்றி வீரனே (பூபாலா) பூமியை ரகூதிப்பவனே (நீபா) கடம்பு அணிந்தவனே (பாலா) குழந்தையே (தாதையும் ஒதும்) தந்தை சிவபிரானும் கற்கும்படி -