பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 281 醬 அருமை வாய்ந்தவனே! மூவகை யாகாக்கினிகளுக்கும் நாயகனே! பரிசுத்த மூர்த்தியே பற்றற்றவனே! முத்தியளிக்கும் பெருமாளே! (நற்றாளைப் பாடற்கே நற்சொற் றருவாயே) 1127. அகரம் முதலெழுத்தாகக் கூறப்படும் ஐம்பத்தொரு அக்ஷரங்களையும் (அகில கலைகளும்) - சகல கலைகளையும் (அறுபத்து நான்கு கலைகளையும்), பல வகைய உண்மைப் பொருள்களையும், எண்ணரிய மறைப் பொருள்களையும், தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற பொருளை, எல்லாப் பொருள்களுமாய் விளங்கும். வைத்திய சாஸ்திரம், உருவ சாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுரா பாடணம், நாடகம், நிருத்தம், சத்தப் பிரமம், வீணை வேணு, மிருதங்கம், தாளம், அத்திர பரீட்சை, கண்க பரீட்சை, இரத பரீட்சை, கஜ பரீட்சை, அசுவ பரீட்சை, இரத்தின பரீட்சை, பூமி பரீட்சை, சங்கிராம இலக்கணம், மல்யுத்தம், ஆகருடனம் உச்சாடனம், வித்துவேடணம், மதன சாத்திரம், மோகனம், வசீகரணம், இரச வாதம், காந்தருவ வாதம், பைபீல வாதம், கவுத்துக வாதம், தாது வாதம், காருடம், நட்டம், முட்டி, ஆகாயப் ப்ரவேசம், ஆகாய கமனம், பரகாயப்ரவேசம், அதிருசியம், இந்திரசாலம், மகேந்திரசாலம், அக்கினித் தம்பம், சலத் தம்பம், வாயுத் தம்பம், திட்டித் தம்பம், வாக்குத் தம்பம்,சுக்கிலத் தம்பம், கன்னத் தம்பம், கட்கத் தம்பம், அவத்தை ப்ரயோகம் இனி திருப்புகழ் 907 கீழ்க்குறிப்பிற் குறிப்பிட்ட மகளிர்க் குரிய 64 ீT - கீதம், வாத்தியம், நிருத்தம், சித்திரம், பத்திர திலகங் கத்தரிக்கை பல்வகை அரிசி பூக்களால் கோலம் வைத்தல், பூ அமளி அமைக்கை ஆடை உடைபற்களுக்கு வர்ணம் அமைக்கை, பள்ளியறையிலும் பான அறையிலும் மணி பதிக்கை படுக்கை அமைக்கை, ஜலதரங்கம், நீர் வாரி அடிக்கை, வேடங் கொள்கை, மாலை தொடுக்கை, மாலை முதலியன அணிகை ஆடையாபரணாதிகளால் அலங்களிக்கை, சங்கு முதலியவற்றால் காதணி அமைக்கை வாசனை கூட்டுகை, ஆபரணம் இயற்றுகை, இந்திரஜாலம், கெளசு மாரம், ஹஸ்த லாகவம், பாக சாஸ்திர உணர்ச்சி, தையல் வேலை, நூல்கொண்டு காட்டும் (தொடர்ச்சி 282- ஆம் பக்கம் பார்க்க)