பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 திருப்புகழும் தெய்வங்களும் (திருமால்) 5. ரீ ராமாவதாரம்: ராமாயணச் சுருக்கத்தைத் திருப்புகழில் 379 (ஆலகால), 987 (வாலவயதாகி, 1156 குனகியொரு எனத் தொடங்கும் பாடல்களிற் காணலாகும் பூரீராமர் மேக நிறத்தவர் என்பதும், தாய் கோசலை குழந்தை பூரீ ராமரொடு குலாவுவதும், விசுவாமித்திரரது யாகத்தை பூரீராமர் காத்ததும், அவர் தாடகையைச் சங்கரித்ததும், வில்லை முறித்து அவர் சீதையை மணந்ததும், சீதை தங்க நிறத்தவள். மெய்வேதலகூழ்மி - என்பதும், தம்பியும், சீதையும் உடன்வரத் தாய்சொல் தவறாது பூரீ ராமர் காட்டுக்குச் சென்றதும், ராமர் காகத்துக்கு ஒரு கண் அளித்ததும், சூர்ப்பநகை ராவணனிடத்திற் சீதையைப் பற்றிக் கலகம் செய்ததும், மாயமானை (மாரீசனை) வதைத்ததும், சீதையை ராவணன் தூக்கிச்சென்று இலங்கையில் தனது படைவீட்டில் அசோகவனத்திற் சிறைவைத்ததும், ரீ ராமர் மராமரத்தை அட்டதும், வாலியை வதைத்ததும், தாரையைச் சுக்ரீவற்கு அளித்து அரசாட்சியை ஈந்ததும், சீதையைத்தேடி ரீராமர் சென்றதும், சுக்ரீவன் படைதந்து உதவினதும், போருக்கு எழுந்ததும், அதுமாரொடு எழுபது வெள்ளம் வானரசேனைகள் சென்றதும், ராவணன் அரசாட்சியில் இலங்கையிற் சூரியன் புக அஞ்சினதும், அநுமார் இலங்கையை எரித்ததும், ரீராமர் கடல் மீது கோபித்துப் பாணம் எய்ததும், சேதுபந்தனம் செய்ததும், விபீஷணரது சரணாகதியும், ஏழுநாள் யுத்தமும், யுத்த வர்ணனையும், கும்பகர்ணன் வதமும், ராவணனுக்கு வீணைக்கொடி என்பதும், ஹநுமார் தோள்மிசை யிருந் து பூரீராமர் போர் செய்ததும், ராமசரத்தின் ஆற்றலும், இலங்கை அரக்கர்கள் வதமும், ராவணன் வதமும், அவன் தலைகள் மலைபோலவும் பனம்பழம் போலவும் அற்று விழுந்ததும், சீதையை மீட்டதும், இலங்கையை அழித்ததும், விபீஷணருக்கு முடி சூட்டிய தும், அதுமனை உகந்ததும், பூரீராமரின் பிள்ளைகள் ராமருடன் போர் செய்ததும் - ஆகிய விஷயங்கள் கூறப்பட்டுள. 6. கிருஷ்ணாவதாரம்: பூர் கிருஷ்ணபிரான் இடையர்குலத்தவ ரென்பதும், அவர் தயிருண்டதும், வெண்ணெய் திருடி உண்டதும், உறிகளை உடைத்ததும், உரலொடு கட்டுப்பட்டதும், உருண்டதும், யசோதையிடம் அடிபட்டதும், கம்ஸன் விட்ட அலகையைச் சங்கரித்ததும், அவன் அனுப்பின யானையின் கோட்டை முறித்ததும், "23