பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 முருகவேள் திருமுறை (7- திருமுறை

  • கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய

மெய்கள்தோ ணிப்பிறவி யலைவேலை; மெள்ள ஏ றிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண முல்லைவே ருற்பலமு ளரிநீபம். வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது சொல்லையோ திப்பணிவ தொருநாளேt; துள்ளுர் மா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு வள்ளிமா னுக்குமயல் மொழிவோனே. தொல்வியா ளத்துவளர் செல்வர்Xயா கத்தரையன் எல்லைகா ணற்கரியர் குருநாதா: (551-ம் பக்கத் தொடர்ச்சி) திக்குகளிலெல்லாம் சொல் விசாரத்து இசைய = எடுத்துச் சொல்லப்படும் கவலைகளில் பொருந்த (வெறும் சொல்லாராய்ச்சியில் பொருந்த என்றும் கொள்ளலாம்), மெய்கள் தோணி = உடம்புகள் தோன்றி (தோணி = மரூஉ), பிறவி அலை வேலை = பிறவியாகிய அலைகளையுடைய கடலை"..எனப் பொருள் காண்பர் அன்பர் வாகீச கலாநிதி ப்ரும்மது கி.வா. ஜகந்நாத அபயா.

  • கல் = கல்லை.

f சுறாவாகிய பெருமீன் சிறு மீன்களை அடக்கி உண்ணுவது போல நற் பெரிய கல்வி - நல்ல அருள் ஞானக் கல்வியின்முன் பிற கலைஞானங்கள் அடங்கி ஒடுங்கும்; ஆதலால் அந்த அருள் ஞானமாம் பெரிய கல்வி வீற (எனக்குக் கைவசப்பட்டு விளங்க) என்பது 1231-ஆம் பாடலின் முதலடியின் கருத்து. கரிய அஞ்ஞானம் மூடியுள்ள மனத்தை நிலையாக நிறுத்தி நாலு திசையிலுள்ள பெரியோர்கள் சொன்னவற்றை ஆராய்வதால் மெய்கள் தோன்றிப் பிறவிக் கடலை ஏறிக் கடந்து - அல்லது திசைப் பெரியோர்கள் செய்துள்ள ஆராய்ச்சியில் ஏற்பட்ட மெய்களை (உண்மைகளைத்) தோணியாகக் கொண்டு பிறவிக்கடலை ஏறிக் கடந்து குரவு, விளா, ஆகிய மலர்கொண்டு உனது பாத தாமரையைப் பூசித்து, உனது புகழை ஒதிப் பணியும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமா என்பது அடிகள் 2,3,4ன் கருத்து. # மா னித்த முனி = மால் நீத்த முனி - சிவ முநிவர் வள்ளியம்மை வரலாறு - பாடல் 382-பக்கம் 164