பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் பார்வதியும் 699 1. தேவியின் உருவமும் நிறமும்: செம்பொன் மேனியள், மரகதம் பொன் மேனி, ஆகாச ரூபி, மரகத சொரூபி, பஞ்ச முகவாலை, வேதாகம கலை ரூபர்ள், வேதச் சொருபாள். நாதவடிவி, சோடி மதித்தோற்றம், மாணிக்க மி(ன்)னாள், பச்சை யெறிக்கும் ப்ரபையள், பச்சை நங்கை கோல நீல வருணத்தி, கார்போலு மேனி(யள்) 2. தேவியின் உடை செம்பொற் பட்டு உத்தரியம் புலித்தோலுடை 3. தேவியின் திரு நாமங்களுள் அருமை வாய்ந்தன. அகில ஜக அண்ட நாயகி, அஞ்சு முக நீலி, அம்பன கரதலி, (அம்பணம் - ஒருவகை யாழ்), ஆதியந்தமுமான சங்கரி, ஆறு சமயத்தி, எண்குண பூரணி, காயத்திரி, ప్స్తో சக்தி, சமய முதல்வி, திே தது தரி (பொன்வில் மேரு, நவசித்தி யருள் சத்தி, நாகபூஷணத்தி, நாளுமினிய கனி, பஞ்சபாண், பதிவிரதை முக்கோணத் தான்த்தாள், ராஜத லக்ஷண லக்ஷ மி, மழுவுமை கரத்தி, முயலகபதத்தி, மூவர்க்கு முன்னாள், வேதக்குழலாள். 4. தேவியின் வாகனம்: விடை எருது, சிங்கம் "கிழப்பொற்காளை மெலேறும் எம் நாயகி (626 சிங்கமேறி (768) 5. தேவியை வழிபடுவோர். சரஸ்வதி இலக்குமி, ரதி இந்திராணி திருத்திகை முதலிய மாதாக்கள், சத்த மாதர்கள், ரம்பை ஆகிய தெய்வப் பெண்கள். தேவியின் பதத்திற் சிவபிரான் பணிவதில் அவரது சடா மகுடத் துள்ள கொன்றை, கரந்தை இவைகளின் மணம் தேவியின் பாதத்தில் வீசுகின்றது. 6. தேவியின் பராக்கிரமமும், திருவிளையாடலும், பெருமையும்: தேவி திருமாலின் தங்கை கணபதியின் தாய், முருகவேளின் அன்னை சூரனை வெல்ல வேலாயுதத்தை முருகவேளுக்கு எம் புதல்வா வாழி வாழி" என ஆசி கூறி அளித்தவள். சிவபிரானுக்கு உயிர் சிவனுடன் நடனம் புரிப்வள் (644), சிவபிரான் ஆடும்போது பாடுபவள், தாளம் ஒத்துபவள் (1239, 1081); சிவபிரான்து இடது பாகத்தைப் பெற்றவள். சகல அண்டங்களையும் ஈன்றவள்; சகல உலகங்களுக்கும், உயிர்களுக்கும், ஐந்து பூதங்களுக்கும் ஒரு முதலாகி