பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 499 இவ்வாறாக (யோனிவாய் தொறும்) எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதங்களிலும் (உற்பவியா) உற்பவித்து. தோன்றிப் பிறந்தும், (விழா) பின்னர் இறந்தும், (இங்ங்னம்) உலகில் தடுமாற்றம் அடைந்தே (திரிதரு காலம்) அலைகின்ற காலம் எத்தனை ஊழி காலம் என்று தெரியாது. (இறைவனே) நீ வாழ்வாயாக (இனி) இனியேனும் நான் பிறவா வண்ணம் நீ அருள் புரிவாயாக; * (கற்பகம்) தென்னை, (வேழம்) கரும்பு இவைகளுக்கு ஒப்பாக (நீண்டு வளர்ந்துள்ள) பசிய இளந் தினைகள் உள்ள புனத்தில் வீற்றிருந்த கற்பு நிறைந்த மாது - வள்ளி அணைதரும் (அபிராம) அழகனே! பச்சைக் கற்பூர (துரளி லேபன) பொடிப் பூச்சு அணிந்துள்ளவனும், மல் யுத் ஏற்ற புயத்தை உடையவனுமான (பாக சாதனன்) இந்திரனுடைய கற்பக லோகம் - கற்பக விருகூடிங்கள் உள்ள பொன்னுலகைத் (தாரண ரகூதித்தவனே . பொன்னுலகுக்கு நிலைத்த வாழ் த் தந்தவனே! (கிரிசாலம்) கிரிசால்த்தவ்ன்ே மலைக் கூட்டத்தில் விளங்குபவனே! (விப்ர சமூக அந்தணர் கூட்டத்தில் இருப்புவனே! (வேதன) வேதத்தில் உள்ள்வனே (பச்சிம பூமி) மேல் புறத்தில் உள்ள ( பூமி) விண்ணுலகின் அல்லது பச் - இம் - பூமி பொலிவு உள்ள ப்ொன் உலகின்) காவலனே! வெட்சியும் கடப்ப மாலையும் அணிபவனே! (நீர்) நிரம்பிய கடல் சேறு பட்டெழ, எழுகிரியும் சூரனும் பொடிப்ட்டழியப் பராக்ரமம் பொருந்திய வேன்லச் செலுத்தின பெருமாளே! (இனிப் பிறவாது நீயருள் புரிவாயே) 1205. (அயில் விலோசனம்) வேல் போன்ற கண்கள் குவியவும், வாசகம் பேச்சு பதறவும், ஆனனம் - முகம் சிறு வேர்வை உறவும். (அளக பாரமும்) பாரம் கலையவும், மேலே விழுந்து (அதர பானம் உண்டு) வாயிதழ் ஊறலைப் பருகி, அன்பு பூண்ட் மாதர்களின் மலைபோன்ற கனத்ததும், குங்குமம் கொண்டதுமான (பயோதரம்) கொங்கைகளை அணைய வேண்டும் என்கின்ற (ஆதரம்) ஆசை - அடியேனால் (தவிரொணாது) நீக்க முடியாததாய் இருக்கின்றது. (அங்ங்ணம் iருந்தபோதிலும்). உனது கருணை மிக்குள்ள தருண பாதமும் |ளமை பொலியும் திருவடிகளை (எனக்கு)த் தந்தருள வேண்டுகின்றேன்;