பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் வள்ளியும் 725 எழுதிக்கொடுத்தால், எழுதிவாங்குபவரிடம் மூலப்பிரதியும், யாவருங் *rrsmarž salą tu Gurr si G\ -##96ů (Public Registry Office sö) o sviranto நகலும் இந்நாளில் இருப்பது போல - முருகவேளும் தான் வள்ளிக்கு வழியடிமை என்றெழுதிய சாசனத்தை (Service agreement) வள்ளியின் காதோலையில் மூலத்தை எழுதிக்கொடுத்தும், அதன் உண்மை நகலை வேதம் அறிய, தேவர்கள் அறிய, உலகமெல்லாம் அறிய மேருமலையில் எழுதியும் வைத்தனராம். இதை 'குறமாதின்..... ழயோலை சாதனம் என்றுரையா" (1002) வேடுவர் சிறுமி க்கு யான் வழியடிமை யெனச் செப்பி வேத மும் அமரரும் மெய்ச்சக்ர வாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே. (199) என விளக்கியுள்ளார். இங்ங்ன மெல்லாம் வள்ளியின் பெருமையைக் கண்ட காரணத்தால் - "முருகா! நீ குறத்தி கிங்கரன், நீ வள்ளி திருவேளைக்காரன் '. நீ வேடிச்சி காவலன்" என்றெல்லாம் வள்ளியோடு மருவிய உன திருநாமங்களையே நான் ஓதி உன் சீர்பாத வகுப்பாதி பாட வேண்டும் என அருணகிரிநாதர் வ்ேன்டினர். "குறத்தி கிங்கரன் எனப் படைத்த பெயர் பேசா நின் பதயுகப் ப்ரசித்தி யென்பன வகுத்துரைக்க நின்பணி தமிழ்த்ரயத்தை யருள்வாயே" - (1233) என்றனர். வேண்டுவார்_வேண்டுவதே இறைவன் ஈவான்; எனவே இவ் வேண்டுகோளின் விளைவாகத் "திருவகுப்பு" என்னும் திப்பிய நூல் எழுந்தது. ஆதலால் அருணகிரியார் அருளிய திருவகுப்புக்களில் எல்லாம் (பதினெட்டிலும்) (9-10 தவிர) வள்ளியின் பெருமையோ, பெயரோ காணலாகும் மேலே குறித்தவாறு வள்ளியுட்ன் பல திருவிளையாடல்களைச் செய்த பெருமான் ஈற்றில் வள்ளிக்கு ஸ்பரிச திகூைடியும், பிரணவ உபதேசமும் செய்து, தமது தேவியாக்கிக் கொண்டார். செட்டியாக வந்து வளையல் இட்டதால் ஸ்பரிச தீகூைடியும், விநாயகர் யானையாய் எதிரில் வ்ந்ததால் பிரணவக் காட்சியும் பெற்றுப் பின்முருகவேளை அணைந்த போ அது ால் பிரணவ உபதேசமும் வள்ளியம்மை பெற்றதாக அருணகிரியார் தெரிவிக்கின்றனர்.